செய்திகள் மலேசியா
இராணுவ கொள்முதல் வழக்கு: முன்னாள் இராணுவ தளபதி, மனைவிகள் கைது
புத்ராஜெயா
முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் டான் ஸ்ரீ முஹம்மது ஹபீஸுட்டீன் ஜந்தான், அவரது இரண்டு மனைவிகள், ரிமாண்ட் மனு தொடர்பாக வியாழக்கிழமை ஜனவரி 8 அன்று இங்குள்ள மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
ராணுவ கொள்முதல் டெண்டர்களுடன் தொடர்புடைய ஒரு கார்டெல் விசாரணைக்கு உதவுவதற்காக இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் காலை சுமார் 10 மணியளவில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) வாகனத்தில் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். முன்னதாக, புதன்கிழமை, ஜனவரி 7 அன்று ராணுவ ஒப்பந்த டெண்டர்கள் தொடர்பாக நடந்து வரும் விசாரணையில் வாக்குமூலம் வழங்க MACC தலைமையகத்திற்குத் தாங்களே முன்வந்தபோது, முன்னாள் ராணுவத் தளபதியும் அவரது மனைவிகளும் கைது செய்யப்பட்டனர்.
இதனுடன் தொடர்புடைய அதே விசாரணையில், மேலும் ஒரு தம்பதியரும் அதே நாளில் கைது செய்யப்பட்டு, ஏழு நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கைகளை உறுதிப்படுத்திய MACC தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி, விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை, ஜனவரி 6 அன்று ராணுவ கொள்முதல் டெண்டர்களை நிர்ணயிக்க கார்டெல் இயக்கியதாக சந்தேகிக்கப்படும் 17 நிறுவன இயக்குநர்களுக்கு எதிராக, ஐந்து நாள் ரிமாண்ட் உத்தரவை MACC பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
January 9, 2026, 10:58 pm
தலைமைத்துவம் என்பது நேர்மை, மக்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும்: பிரதமர்
January 9, 2026, 10:56 pm
யூபிஎஸ்ஆர், பிடி 3 தேர்வுகள் குறித்து ஆராய தேவையில்லை; உடனடியாக அமல்படுத்துங்கள்: சிவசுப்பிரமணியம்
January 9, 2026, 10:33 pm
யூபிஎஸ்ஆர், பிடி 3 தேர்வுகள் குறித்து ஆராயத் தேவையில்லை; உடனடியாக அமல்படுத்துங்கள்: சிவசுப்பிரமணியம்
January 9, 2026, 1:43 pm
பிரபலங்கள் அந்தஸ்து சிகரெட், வேப்பிங் ஆகியவற்றை விளம்பரப்படுத்துவதற்கு அல்ல: டாக்டர் சூல்கிப்ளி
January 9, 2026, 12:26 pm
பாதுகாப்பு, எரிசக்தி, கட்டுமானத் துறைகளில் மலேசியா - துருக்கி இடையிலான ஒத்துழைப்பு தொடரும்: பிரதமர்
January 9, 2026, 12:24 pm
1 எம்டிபி நிதியிலிருந்து அரசாங்கம் 5 பில்லியன் ரிங்கிட்டை மீட்டெடுக்கும்
January 9, 2026, 12:03 pm
