செய்திகள் மலேசியா
கூடுதல் நிதி வரவேற்கத்தக்கது; தமிழ்ப்பள்ளிகளுக்கு முழுமையாக பயனளிக்க வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
நீலாய்:
தமிழ்ப்பள்ளிகளுக்காக அரசாங்கம் கூடுதல் நிதி ஒதுக்கியது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.
சிரம்பான் தொகுதி பெர்சத்து சயாப் பிரிவுத் தலைவரும் நீலாய் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளருமான டத்தோ சரவணக்குமார் இதனை கூறினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தமிழ்ப்பள்ளிகளுக்கு கூடுதல் நிதிகை ஒதுக்கினார்.
சுமார் 50 மில்லியன் ரிங்கிட்டை அவர் தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கினார்.
அரசாங்கத்தின் இந்த ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது.
இருந்தாலும் இந்நிதி தமிழ்ப்பள்ளிகளுக்கு முழுமையாக பயனளிக்க வேண்டும்.
தமிழ்ப்பள்ளிகளை சீரமைக்கவும் மேம்பாட்டிற்கு இந்நிதி பயன்படுத்தப்பட வேண்டும்.
அதே வேளையில் நாட்டில் பல தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பற்றாக்குறை பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன.
இப்பள்ளிகளை வேறு இடங்களுக்கு மாற்றவும் அரசாங்கத்தின் இந்த நிதிகள் பெரும் பங்களிப்பாக இருக்க வேண்டும்.
இதற்கான திட்டங்களை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 9, 2026, 1:43 pm
பிரபலங்கள் அந்தஸ்து சிகரெட், வேப்பிங் ஆகியவற்றை விளம்பரப்படுத்துவதற்கு அல்ல: டாக்டர் சூல்கிப்ளி
January 9, 2026, 12:26 pm
பாதுகாப்பு, எரிசக்தி, கட்டுமானத் துறைகளில் மலேசியா - துருக்கி இடையிலான ஒத்துழைப்பு தொடரும்: பிரதமர்
January 9, 2026, 12:24 pm
1 எம்டிபி நிதியிலிருந்து அரசாங்கம் 5 பில்லியன் ரிங்கிட்டை மீட்டெடுக்கும்
January 9, 2026, 12:03 pm
கடந்த ஐந்து ஆண்டுகளில் 57,000க்கும் மேற்பட்ட மலேசியர்கள் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றுள்ளனர்
January 9, 2026, 11:23 am
48 மணி நேரத்திற்குப் பின் குளத்தில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட முதிய பெண்
January 9, 2026, 11:18 am
