நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடந்த ஐந்து ஆண்டுகளில் 57,000க்கும் மேற்பட்ட மலேசியர்கள் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றுள்ளனர் 

கோலாலம்பூர்:

கடந்த ஐந்து ஆண்டுகளில் (2020–2025) மொத்தம் 61,116 மலேசியர்கள் தங்களது குடியுரிமையைத் துறந்துள்ளதாக தேசிய பதிவு துறை தலைமை இயக்குநர் பத்ருல் ஹிஷாம் அலியாஸ் தெரிவித்துள்ளார்.

அவர்களில் 93.78 சதவீதம், அதாவது 57,314 பேர், சிங்கப்பூர் குடியுரிமை பெற்றுள்ளனர். இதனால், சிங்கப்பூர் மலேசியர்களுக்கான முக்கிய குடியேற்ற நாடாக உள்ளது. 

இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளதுடன், அவை 2.15 சதவீதம் மட்டுமே ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 10,000 மலேசியர்கள் குடியுரிமையை கைவிடுவதாகவும் அவர் கூறினார். மலேசிய அரசியலமைப்பின்படி இரட்டை குடியுரிமை அனுமதிக்கப்படாத நிலையில், சிங்கப்பூரும் 21 வயதிற்குப் பின் இரட்டை குடியுரிமையை அங்கீகரிப்பதில்லை.

குடியுரிமை துறந்தவர்களில் பெண்கள் அதிகம் என்பதுடன், கடந்த ஐந்து ஆண்டுகளில் 35,356 பெண்கள் மலேசிய குடியுரிமையை விட்டுவிட்டனர். 

வயது அடிப்படையில், 31–40 வயதினர் 19,287 பேர்ரும் அதனைத் தொடர்ந்து 21–30 வயதினர் 18,827 பேரும் மலேசியாகுடியுரிமையை துறந்துள்ளனர்.

பெரும்பாலானவர்கள் பொருளாதாரத்தினாலும், குடும்ப சூழ்நிலை காரணங்களாலும் குடியுரிமையை மாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, சிங்கப்பூரில் ஏற்கனவே பணிபுரிந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளும், வருமான நிலை காரணமாகவும் அந்நாட்டு குடியுரிமை பெறுவது எளிதாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset