நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உயர் திறன் கொண்ட தொழிலாளர்களை உருவாக்கும் முயற்சிகளுக்கு எச்ஆர்டி கோர்ப்பின் பங்கு முக்கியமானது: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

உயர் திறன் கொண்ட தொழிலாளர்களை உருவாக்கும் அமைச்சின் முயற்சிகளுக்கு  எச்ஆர்டி கோர்ப்பின் பங்கு முக்கியமானது.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை தெரிவித்தார்.

திறன் மேம்பாட்டு நிதியகத்தின் வருகையை முடித்த பிறகு, நான் எச்ஆர்டி கோர்ப்பிற்கு எனது பணிப் பயணத்தைத் தொடர்ந்தேன்.

அனைத்து எச்ஆர்டி கோர்ப் ஊழியர்களும் ஒற்றுமை உணர்வோடு என்னை வரவேற்றனர்.

மேலும் பயிற்சியின் திசை, திறன்களை மேம்படுத்துதல், தொழில்துறையின் அதிகரித்து வரும் மாறும் தேவைகளுக்கு ஏற்ப பணியாளர்களை மாற்றியமைத்தல் குறித்து ஊழியர்களுடன் வெளிப்படையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டேன்.

மேலும் எச்ஆர்டி கோர்ப்பின் சமீபத்திய சூழ்நிலையை ஆராய்வதற்கும் இந்தப் பணிப் பயணம் எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது.

பயிற்சித் திட்டங்களின் செயல்திறனை வலுப்படுத்துதல், ஊழியர்கள், முதலாளிகளுக்கான அணுகலை விரிவுபடுத்துதல், ஒவ்வொரு முயற்சியும் நாட்டின் உற்பத்தித்திறன், போட்டித்தன்மையில் உண்மையிலேயே தாக்கத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்வதற்கான முயற்சிகளும் இதில் கவனம் செலுத்தப்பட்டன.

எச்ஆர்டி கோர்ப் ஊழியர்களின் நிபுணத்துவம், அனுபவம், உயர் அர்ப்பணிப்பு மனிதவள அமைச்சுடனான ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்படுத்தப்படும்.

இதன் மூலம் அதிக திறமையான, முற்போக்கான, எதிர்கால சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் பணியாளர்களை உருவாக்க முடியும்.

குறிப்பாக மடானி அரசாங்கத்தின் உள்ளடக்கிய, நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான விருப்பங்களுக்கு ஏற்ப இது இருக்கும் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாக டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset