நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜாஹித் ஹமிடி மீதான 47 குற்றச்சாட்டுகள் தொடர்பில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது: ஏஜிசி

கோலாலம்பூர்:

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி மீதான  47 குற்றச்சாட்டுகள் தொடர்பில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது.

சட்டத் துறை தலைவர் அலுவலகம் ஏஜிசி இதனை தெரிவித்தது.

ஜாஹித் ஹமிடி சம்பந்தப்பட்ட யாயாசான் அகல்புடி நிதி தொடர்பான குற்றவியல் நம்பிக்கை மீறல், ஊழல் மற்றும் பணமோசடி தொடர்பான 47 குற்றச்சாட்டுகள் மீது மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது.
இது வழக்கை இறுதி முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முடிவாகும்.

இது அரசியலமைப்பு, தொடர்புடைய சட்டங்களின் கீழ் ஏஜிசி அதிகாரங்கள் மற்றும் விருப்பத்திற்கு இணங்க உள்ளது.

நீதியின் நலன்கள், வழக்கு விசாரணை செயல்முறையின் நேர்மை, குற்றவியல் நீதி அமைப்பில் உறுதித்தன்மை, வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கான தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தொழில்முறை,  சட்டப்பூர்வ பரிசீலனைகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட முடிவு எடுக்கப்பட்டது என்று ஏஜிசி வலியுறுத்தியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset