நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய கடப்பிதழ், அடையாள அட்டைக்கு புதிய தோற்றம்; உயர் பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்படுகிறது: சைபுடின்

புத்ராஜெயா:

மலேசிய கடப்பிதழ், அடையாள அட்டைக்கு புதிய தோற்றத்துடன் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இது  உயர் பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்படுகிறது என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் கூறினார்.

குடிநுழைவுத் துறையும் தேசிய பதிவு இலாகாவும் அடுத்த ஆறு மாதங்களுக்குள் புதிய தோற்றமுடைய மலேசிய கடப்பிதழ், அடையாள அட்டையை அறிமுகப்படுத்தும்.
மாறிவரும் தொழில்நுட்பம், தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப ஆவணத்தின் பாதுகாப்பு அளவை வலுப்படுத்த வேண்டும்.

மேலும் அடையாள அட்டை போலியானதை எதிர்த்துப் போராடுவது உட்பட, புதிய வடிவமைப்புகள், பாதுகாப்பு அம்சங்களுடன் அடையாள ஆவணத்தில் மேம்பாடுகள் செய்யப்படுகின்றன.

மக்கள் தங்கள் கடப்பிதழ், அடையாள அட்டைகளை புதுப்பிக்க அவசரப்படத் தேவையில்லை.

ஏனெனில் அவை காலாவதியாகும் வரை அவற்றைப் பயன்படுத்தலாம்.

நாட்டின் அடையாளம் மற்றும் பயண ஆவணங்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சிகளில் அரசாங்கத்தின் முக்கியமான சாதனைகளில் இந்த செயல்படுத்தல் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset