நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

48 மணி நேரத்திற்குப் பின் குளத்தில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட முதிய பெண்

ஷா ஆலம்,

செக்ஷன் U11, புக்கிட் பண்டராயா பகுதியில் அமைந்துள்ள மழைநீர் சேமிப்பு குளத்தில், ஒரு முதிய பெண்ணின் சடலம் மிதந்த நிலையில் கடந்த புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

ஷா ஆலம் மாவட்ட காவல் துறைத் தலைவர், உதவி ஆணையர் ராம்சே எம்போல் கூறுகையில், காலை 11.30 மணியளவில் மீன்பிடிப்பாளர்களிடமிருந்து சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததாக தெரிவித்தார்.

“ஆரம்பகட்ட விசாரணையில், உயிரிழந்தவர் 70 வயதுக்கு மேற்பட்ட உள்ளூர் பெண் எனவும், சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்தவர் எனவும் நம்பப்படுகிறது.

மேலும், அவர் கண்டெடுக்கப்படுவதற்கு முன் 48 மணி நேரத்திற்கும் மேலாக உயிரிழந்திருந்ததாக உடல் பரிசோதனையில் தெரியவந்துள்ளது,” என்று அவர் கூறினார்.

அதே நாளில் மாலை 6 மணியளவில், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் காவல் துறையை தொடர்புகொண்டு, அவர் தங்களின் சகோதரி என்றும், சம்பவ இடத்திற்கு அருகில் தனியாக வசித்து வந்ததாகவும் தெரிவித்தனர்.

“பின்னர் உயிரிழந்தவரின் அடையாளம் உறுதிசெய்யப்பட்டு, உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மரணத்திற்கான காரணம் முழுமையான ஆய்வக அறிக்கை கிடைத்த பின்னரே உறுதி செய்யப்படும்,” என அவர் கூறினார்.

கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset