நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலை பொது சொத்து, தனிநபருக்கு சொந்தமானது அல்ல; அவதூறுகளை பரப்ப வேண்டாம்: டான்ஸ்ரீ நடராஜா

பத்துமலை:

பத்துமலை முருகன் திருத்தலம் பொது சொத்து. தனிநபருக்கு சொந்தமானது அல்ல.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா இதனை கூறினார்.

பத்துமலையில் நிர்மாணிக்கப்படவிருக்கும் மின் படிக்கட்டு விவகாரம் தற்போது நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு செய்தியாளர்களிடம் பேசியது எங்களுக்கு பெரும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உண்மை தெரியாமல் அவர் பேசியிருப்பது எனக்கு பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இதன் அடிப்படையில் அவருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கறிஞர் நோட்டீஸ்க்கு அவர் 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும். இல்லையென்றால் அவர் மீது வழக்கு தொடரப்படும்.

மேலும் இவ்விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் அது குறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை.

நான் ஒன்றை மட்டும் தெளிவாக கூற விரும்புகிறோம்.

பத்துமலை முருகன் திருத்தலம் பொது சொத்து. தனிநபருக்கு சொந்தமானது அல்ல.

மேலும் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் இயங்குகிறது.

எந்தவொரு நடவடிக்கைகளும் முடிவுகளும் சட்டத் துறை தலைவரின் அனுமதியோடுதான் மேற்கொள்ளப்படும்.

ஆக தவறான தகவல்களையும் செய்திகளையும் பரப்ப வேண்டும்.

இது பத்துமலைக்கும் தேவஸ்தானத்திற்கும் தான் களங்கத்தை ஏற்படுத்தும் என்று டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset