நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா பொது போக்குவரத்தில் புதிய எழுச்சி: பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்வு

பெட்டாலிங் ஜெயா:

பிரசாரனா ரயில், பேருந்து சேவைகளில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, மலேசியாவின் பொது போக்குவரத்து அமைப்பின் மீது பொதுமக்களின் நம்பிக்கை மீண்டும் உயர்ந்து வருவதை காட்டுகிறது என யுபிஎம் பல்கலைக்கழகத்தின் சாலை பாதுகாப்பு ஆராய்ச்சி மையத் தலைவர் இணைப் பேராசிரியர் லா தேக் ஹுவா தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டில் பிரசாரனா சேவைகளில் தினசரி சராசரியாக 13.1 லட்சம் பயணிகள் பயணம் செய்ததாகவும், இது 2024ஐ ஒப்பிடுகையில் 11% உயர்வாகும் என்றும் அவர் கூறினார்.

இது நாட்டின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்  இலக்குகளுக்கான நல்ல முன்னேற்றமாகும் என்றார்.

எனினும், ஷா ஆலம் ரயில் சேவையைத் தொடங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம், இந்த ஆண்டில் பிரசரானாவின் போக்குவரத்தைப் பயன்படுத்தும் நகர்ப்புற பயணிகளின் எண்ணிக்கையைச் சற்று பாதிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார். 

தொழில்நுட்ப சிக்கல்களால் அந்த பாதையின் ‘பிழையற்ற இயக்கம்’ (FFR) சோதனை இன்னும் தொடங்கப்படவில்லை என போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.

பாதுகாப்பு சோதனைகளை தவிர்ப்பது பொறுப்பற்றது எனக் கூறிய இணைப் பேராசிரியர் லா, சேவை தொடங்கியதும் பயணிகள் தேவை மீண்டும் உயரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். 

மேலும், ஷா ஆலம் எல்ஆர்டி பாதை, கிள்ளான் பள்ளத்தாக்கு KTM கம்யூட்டர் சேவைக்கு மாற்றாக இருந்து, மொத்த போக்குவரத்து அமைப்பின் நிலைத்தன்மையை உயர்த்தும் என்றும் அவர் கூறினார்.

பொது உட்கட்டமைப்பு திட்டங்களில் காலக்கெடுகளை முன்கூட்டியே அறிவிப்பதை தவிர்த்து, சோதனை கட்டங்களின் அவசியம், முன்னேற்றம் குறித்து பொதுமக்களுக்குத் தெளிவாக விளக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

- சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset