செய்திகள் மலேசியா
தேலண்ட் கோர்ப் முயற்சிகள் மக்களுக்கு பயனளிக்கிறது; நமது தொழிலாளர்களை ஈர்க்கும் திட்டங்கள் தொடரும்: டத்தோஸ்ரீ ரமணன்
பெட்டாலிங்ஜெயா:
சிங்கப்பூர் உட்பட வெளிநாடுகளில் பணி புரியும் நமது தொழிலாளர்களை ஈர்க்கும் திட்டங்கள் தேலண்ட் கோர்ப் வாயிலாக தொடரும்.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.
மலேசிய தொழிலாளர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மக்கள் வேலை தேடி சிங்கப்பூருக்கு செல்வதற்கு அங்குள்ள சம்பளம் தான் முக்கிய காரணமாக உள்ளது.
அதே வேளையில் உயர்வான சம்பளத்திற்கு அங்குள்ள வாழ்க்கை செலவினங்களும் முக்கிய காரணமாக உள்ளது.
அதை நாம் ஒப்பிட முடியா விடாலும் நமது தொழிலாளர்களின் நலனுக்காக அரசாங்கம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக மனிதவள அமைச்சின் கீழ் செயல்படும் தேலண்ட் கோர்ப் வாயிலாக அத்தொழிலாளர்களை ஈர்க்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
இதில் தேலண்ட் கோர்ப் வெற்றி பெற்றுள்ளதால் அம்முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் தேலண்ட் கோர்ப்பின் போட்டித்தன்மை, திறன் வாய்ந்த தொழிலாளர்களை உருவாக்கும் திட்டங்கள் மக்களுக்கு பெரும் பயனாக இருந்துள்ளன.
இத்திட்டங்களின் வாயிலாக 14,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், 50,000த்திற்கும் மேற்பட்ட பெண்கள், 2,000த்திறகும் மேற்பட்ட நிறுவனங்கள் பயன்பெற்றுள்ளன.
இப்படி ஆயிரக்கணக்கான மக்கள் பயன் பெற்றுள்ளனர்.
ஆக மடானி கொள்கைக்கு ஏற்ப தொழிலாளர்களின் மேம்பாட்டிற்கான திட்டங்களில் மனிதவள அமைச்சு தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 7, 2026, 7:19 pm
மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்களால் சுடப்பட்ட ஆடவர் மரணம்: கிள்ளானில் பரபரப்பு
January 7, 2026, 5:37 pm
என் தந்தை துன் மகாதீருக்கு வயது மூப்பு காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம்: முக்ரிஸ்
January 7, 2026, 5:08 pm
அரசியலில் இருந்து விலகுவதற்கான நேரம் நெருங்கிவிட்டது: அக்மால் சாலே
January 7, 2026, 3:11 pm
மடானி அரசாங்கத்தை பாதுகாக்கும் ஜாஹித் ஹமிடியின் முடிவு தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டது: குணராஜ்
January 7, 2026, 2:24 pm
மூன்று நடமாடும் தொழிலாளர் நீதிமன்றங்கள் ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்
January 7, 2026, 11:56 am
பாரம்பரிய வீரர்களுக்காக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது தொடர்பில் 45 புகார்கள் பெறப்பட்டுள்ளது: போலிஸ்
January 7, 2026, 10:52 am
இராணுவ வீரர்கள் நேர்மை, நம்பிக்கையை நிலைநிறுத்துவதை உறுதி செய்ய வேண்டும்: மாமன்னர்
January 7, 2026, 10:25 am
விதிமீறல்கள் காரணமாக 10,000க்கும் மேற்பட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன: எம்சிஎம்சி
January 7, 2026, 9:54 am
