செய்திகள் மலேசியா
உயர்கல்விக்கு வழி திறக்கும் மலேசிய அரசு வழங்கும் உதவித்தொகைகள்
பெட்டாலிங் ஜெயா:
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான திறமையான மலேசிய மாணவர்களின் படிக்க வேண்டும் என்ற கனவானது அதற்குத் தேவையான பொருளாதார வசதி இல்லை என்பதால் வெறும் கனவாக மட்டுமே இருந்து வருகிறது.
பல மாணவர்கள், குறிப்பாக B40 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், கிராமப்புற மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் நிதி தடைகள் அல்லது கிடைக்கக்கூடிய உதவிகள் குறித்த தகவல் பற்றாக்குறை காரணமாக தங்களின் கல்வியை இடைநிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
ஆகையால், கல்வி அமைச்சகம், குறிப்பாகக் குறைந்த வருமானம் (B40) குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர உதவும் வகையில் பல்வேறு உதவித்தொகை வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
இதில் அரசு பல்கலைக்கழக அடிப்படை நிதி உதவி (Bantuan Kewangan Asasi IPTA), டிப்ளோமா, இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான B40 TVET உதவித்தொகை (Dermasiswa B40 TVET), மற்றும் சமூகக் கல்லூரி மாணவர் நிதி உதவி (Bantuan Kewangan Pelajar Kolej Komuniti) ஆகியவை அடங்கும்.
அதுமட்டுமல்லாமல், முதுகலை பட்டப் படிப்பில் மேம்படுத்தப்பட்ட கற்றல், பலதரப்பட்ட ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் வகையில் MyBrain Science, MyBrain 2.0 திட்டங்களின் கீழ் அமைச்சகம் உதவித்தொகைகளை வழங்கி வருகிறது.
மாணவர் உதவித்தொகை வழங்கலை நிர்வகிக்கும் உயர் கல்வி அமைச்சகத்தின் உதவித்தொகை பிரிவு, தேவையானத் தகுதிகளை பூர்த்தி செய்யும் அனைத்து மாணவர்களுக்கும் நிதி உதவி கிடைப்பதை உறுதி செய்து வருகிறது.
இந்த உதவித்தொகைகள் மாணவர்களின் பொருளாதார சுமையைக் குறைத்து, அவர்கள் முழுமையாக படிப்பில் கவனம் செலுத்தி, நிர்ணயிக்கப்பட்ட உதவித்தொகை காலத்திற்குள் தங்களின் கல்வியை வெற்றிகரமாக முடிக்க உதவுகின்றன.
வாய்ப்புகளை எதிர்கால வெற்றியாக மாற்றுதல் - சில மாணவர்களின் கருத்துகள்
போர்ட் டிக்சன் பொலிடெக்னிக்கில் கணக்கியல் துறையில் பயிலும் தஸ்மிதா சந்திரனுக்கு, கொரோனா காலத்தில் குடும்பம் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டபோது B40 TVET உதவித்தொகை தன் வாழ்க்கையை மாற்றியதாக அமைந்தது.
“பெண்டமிக் காலத்தில் என் தந்தை இறந்துவிட்டார். அதன்பிறகு அம்மா ஒருவரே குடும்பத்தை நடத்தினார். என் படிப்பை தொடர மிகவும் கஷ்டப்பட்டேன். நண்பர் ஒருவர் கூட எனக்கு பணம் கடன் கொடுத்தார்,” என்று அவர் கூறினார்.
“உதவித்தொகை கிடைத்த பிறகு, மனநிம்மதியுடன் படிப்பில் கவனம் செலுத்த முடிந்தது. புத்தகங்கள் வாங்கவும், கூடுதல் வகுப்புகளில் கலந்துகொள்ளவும் முடிந்தது. மேலும் கடினமாக உழைத்து, சமுதாயத்திற்கு திருப்பித் உதவ வேண்டும் என்ற ஊக்கத்தை இது அளித்தது,” என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, பார்வைக் குறைபாடு கொண்ட யுனிவர்சிட்டி புத்திரா மலேசியா (UPM) மாணவர் இஸுல் ஹகிமி ரோஸ்லி, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான நிதி உதவி (Bantuan Kewangan Orang Kurang Upaya – BKOKU) தான் அவருக்கு வேளாண் வணிக (Agribusiness) படிப்பைத் தொடர வாய்ப்பளித்ததாக தெரிவித்தார்.
“நான் OKU மாணவராக பதிவு செய்யப்பட்டுள்ளேன். இதற்கு முன் புத்தகங்கள் வாங்குவதற்காக பகுதி நேர வேலை செய்யலாமா என்றும் நினைத்துள்ளேன். என் விரிவுரையாளர் BKOKU திட்டத்தை அறிமுகப்படுத்தினார். படிப்பு செலவுகளைப் பற்றிய கவலை இல்லாமல் படிப்பில் கவனம் செலுத்த இது உதவியது,” என்றார் அவர்.
“எனக்குக் கிடைத்த இந்த உதவியானது, மாற்றுத் திறனாளி மாணவர்களைப் பின்தள்ளாமல் அவர்கள் விரும்பும் எந்த துறையிலும் படிக்கும் வாய்ப்புகளை அரசாங்கம் என்றும் ஏற்படுத்தி கொடுக்கும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது,” என்றார் அவர்.
தஸ்மிதா, இஸுல் ஆகியோர், கல்வியை இளம் மலேசியர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வழியாகவும் பயன்படுத்த வேண்டும் என்ற அமைச்சகத்தின் பரந்த நோக்கத்தின் சிறந்த எடுத்துக்காட்டுகளாக திகழ்கிறார்கள்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
January 7, 2026, 7:19 pm
மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்களால் சுடப்பட்ட ஆடவர் மரணம்: கிள்ளானில் பரபரப்பு
January 7, 2026, 5:37 pm
என் தந்தை துன் மகாதீருக்கு வயது மூப்பு காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம்: முக்ரிஸ்
January 7, 2026, 5:08 pm
அரசியலில் இருந்து விலகுவதற்கான நேரம் நெருங்கிவிட்டது: அக்மால் சாலே
January 7, 2026, 3:11 pm
மடானி அரசாங்கத்தை பாதுகாக்கும் ஜாஹித் ஹமிடியின் முடிவு தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டது: குணராஜ்
January 7, 2026, 2:24 pm
மூன்று நடமாடும் தொழிலாளர் நீதிமன்றங்கள் ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்
January 7, 2026, 11:56 am
பாரம்பரிய வீரர்களுக்காக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது தொடர்பில் 45 புகார்கள் பெறப்பட்டுள்ளது: போலிஸ்
January 7, 2026, 10:52 am
இராணுவ வீரர்கள் நேர்மை, நம்பிக்கையை நிலைநிறுத்துவதை உறுதி செய்ய வேண்டும்: மாமன்னர்
January 7, 2026, 10:25 am
விதிமீறல்கள் காரணமாக 10,000க்கும் மேற்பட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன: எம்சிஎம்சி
January 7, 2026, 9:54 am
