நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நான்கு மாநிலங்களில் வெள்ளப் பேரிடர்: 13 நிவாரண முகாம்களில் 1,419 பேர் தங்கியுள்ளனர் 

கோலாலம்பூர்:

நாட்டின் நான்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால், இன்று காலை 11 மணி நிலவரப்படி 1,419 பேர் தற்காலிக நிவாரண முகாம்களில் (PPS) தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று சமூக நலத் துறை (JKM) அறிவித்துள்ளது.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட  522 குடும்பங்கள் சபா, சரவாக், ஜொகூர், பேராக் ஆகிய மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள 13 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதிகபட்ச பாதிப்பு சபா மாநிலத்தில் பதிவாகியுள்ளது. அங்கு மொத்தம் 1,164 பேர் 9 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் பியூஃபோர்ட் (587), கோத்தா பெலுட் (282), கோத்தா கினபாலு (189), டெனோம் (106) ஆகிய பகுதிகள் அடங்கும். 

இதனைத் தொடர்ந்து, சரவாக் மாநிலம் மிரி பகுதியில் 192 பேர், ஜொகூர் மாநிலம் செகமாட் பகுதியில் 27 பேர், பேராக் மாநிலம் கிந்தா பகுதியில் 22 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மொத்த பாதிக்கப்பட்டவர்களில் 872 பேர் பெரியவர்கள். 553 பேர் குழந்தைகள் ஆவர். அதில் 39 பேர் பச்சிளம் குழந்தைகளாவர்.

இதற்கிடையில், இன்பொ பன்சிர் இணையதளத்தின் தகவலின்படி, இன்று காலை 6.45 மணி நிலவரப்படி சரவாக் மாநிலத்தில் குறைந்தது மூன்று நதிகள் அபாய அளவை மீறியுள்ளன.

அதே மாநிலத்தில் பல நதிகள் எச்சரிக்கை நிலையை எட்டியுள்ளன. இதில் பின்துலு பகுதியில் உள்ள குவாலா பின்யோ, சுங்கை சிமிலாஜாவ், சுங்கை சிபியு, மிரி பகுதியில் நங்கா இன்சுங்கை, லிம்பாங், பெனாவா, லாங் தெரு பகுதிகள் அடங்கும்.

- கிருத்திகா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset