நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அணு ஆயுதம் தயார்நிலை: வடகொரியாவின் புதிய நகர்வு

சியோல்:

வடகொரியா, போர் சூழ்நிலைக்கு தனது அணு ஆயுதப் படைகளை தயார்படுத்தும் நடவடிக்கையாக, உயர் தொழில்நுட்பம் கொண்ட ஹைபர்சோனிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளது.
இந்த சோதனையை அந்நாட்டுத் தலைவர் கிம் ஜாங் உன்னே நேரில் மேற்பார்வையிட்டதாக கொரிய மத்திய செய்தி நிறுவனம் (KCNA) தெரிவித்துள்ளது.

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியின் வேகத்தைவிட ஐந்து மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கக் கூடியவை. மேலும், பறக்கும் போது திசை மாற்றும் திறன் கொண்டதால், அவற்றை கண்டறிதலும் தடுத்து நிறுத்துவதும் மிகவும் கடினமாகும்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த சோதனை, “சமீபத்திய புவிசார் அரசியல் நெருக்கடி” காரணமாக மேற்கொள்ளப்பட்டதாக பியோங்யாங் தெரிவித்துள்ளது. 

இதில், அதன் அரசியலில் நட்பு நாடான வெனிசுவேலாவைச் சுற்றியுள்ள சர்வதேச முன்னேற்றங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதே நாளில், பியோங்யாங் அருகிலுள்ள பகுதியில் இருந்து இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதை கண்டறிந்ததாக தென் கொரியாவும் ஜப்பானும் அறிவித்திருந்தன.

இச்சோதனை, இந்த ஆண்டில் வடகொரியா மேற்கொண்ட முதல் ஏவுகணை சோதனையாகும். மேலும், தென் கொரிய அதிபர் லீ ஜே மியூங் பெய்ஜிங்கிற்கு உச்ச மாநாட்டில் பங்கேற்கப் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் இந்த நிகழ்வு நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset