நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தைப்பூச விழாவின் போது மதுபான விற்பனைக்கு தடை: பாப்பாராயுடு

செலயாங்:

தைப்பூச விழாவின் போது மதுபானம் விற்பனைக்கு சிலாங்கூர் மாநில அரசு இவ்வாண்டும் தடை விதிக்கிறது. சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு இதனை கூறினார்.

உலகமெங்கும் தைப்பூச விழா வரும் பிப்ரவரி 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

மலேசியாவை பொறுத்தவரையில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பத்துமலையில் தைப்பூச விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெறும்.

கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பக்தர்கள் இந்த விழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விழாவை முன்னிட்டு சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் நிகழ்வுகளும் பத்துமலையில் நடைபெறவுள்ளது.

இந்த தைப்பூச விழா பக்தர்கள் சமய நெறியுடன் கொண்டாடப்பட வேண்டும். குறிப்பாக தைப்பூச விழாவின் போது மதுபான விற்பனைக்கு மாநில அரசு தடை விதிக்கிறது.

பத்துமலையை தவிர்த்து மாநிலத்தில் தைப்பூசம் கொண்டாடப்படும் அனைத்து இடங்களில் இந்த தடை அமலில் இருக்கும்.

ஆக மக்கள் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி நடக்க வேண்டும் என்று பாப்பாராயுடு கேட்டுக் கொண்டார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset