நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஸ்டீவன் சிம்மின்  உதவிக்குப் பிறகு ஹில்மி இப்போது புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளார்

புக்கிட் மெர்தாஜாம்:

குஸ்கோப் அமைச்சர் ஸ்டீவன் சிம்மின் உதவிக்குப் பிறகு ஹில்மி இப்போது புதிய வாழ்க்கையை தொடங்கிதுயுள்ளார்.

ஹில்மி நோர்டின் வாடகை வீடு மோசடியில் சிக்கி காரில் வாழ வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.

இதனால் ஒரு வருடம் முன்பு சமூக ஊடகங்களில் ஹில்மியின் குடும்பம் வைரலானது.

இந்நிலையில்  முஹம்மது ஹில்மி நோர்டின் முன்பு புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சிம்மிடமிருந்து ஆரம்ப உதவியைப் பெற்றார்.

இதைத் தொடர்ந்து அக் குடும்பம் இப்போது தங்கள் சொந்த முயற்சிகளால் மீண்டும் எழுந்து புதிய வாழ்க்கையை வாழத் தொடங்கியுள்ளது.

வீடற்ற நிலையில் இருந்து மீண்டு ஒரு வருடம் கழித்து, குடும்பத்தினரின் முன்னேற்றத்தைப் பார்க்க ஹில்மியிடம் இருந்து சமீபத்தில் ஒரு கிறிஸ்துமஸ் செய்தியையும் அழைப்பையும் பெற்றதாக ஸ்டீவன் சிம் கூறினார்.

ஹில்மி குடும்ப வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டார்.

அவர்கள் இப்போது ஒரு வாடகை வீட்டில் வசிக்கிறார்கள், ஹில்மி ஒரு லாரி ஓட்டுநராக தனது வழக்கமான வருமானத்தில் அதைச் செலுத்துகிறார்.

ஒரு வருடம் முன்பு, ஹில்மி, அவரது மனைவி,  ஐந்து சிறு குழந்தைகள் ஒரு காரின் ஓரத்தில் ஒரு மோசமான தார்பாலின் படுக்கையில் அமர்ந்திருப்பதை நான் பார்த்தேன். அவர்களைச் சந்தித்தேன். 

இன்று, ஹில்மி புன்னகையுடனும் நம்பிக்கையுடனும் வீட்டின் முன் நிற்கிறார் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset