செய்திகள் உலகம்
மியன்மார் தேசிய தினத்தில் சுமார் 6,000 கைதிகள் விடுதலை
யாங்கூன்:
மியன்மாரின் ராணுவ அரசாங்கம் நாட்டின் தேசிய தினத்தைக் குறிக்கும் வகையில் சுமார் 6,000 கைதிகளை விடுதலை செய்துள்ளதாக அறிவித்திருக்கிறது.
வருடாந்திரப் பொது மன்னிப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமாகக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
மியன்மாரில் ஆட்சிக்கவிழ்ப்பு நடத்தப்பட்ட பிறகு அதன் ராணுவ அரசாங்கம் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைதுசெய்துள்ளது.
விடுதலை செய்யப்பட்டோரில் ஆர்ப்பாட்டக்காரர்களும் இருந்தனரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
52 வெளிநாட்டவரும் விடுதலை செய்யப்பட்டனர் என்றும் அவர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
நாட்டில் பொதுத்தேர்தல் நடைபெறும் வேளையில் கைதிகளின் விடுதலை குறித்த அறிவிப்பு வெளியாளது.
வாக்களிப்பின் அடுத்த இரண்டு கட்டங்கள் இந்த மாதம் நடைபெறவிருக்கின்றன.
முதற்கட்ட வாக்களிப்பில் ராணுவத்தின் ஆதரவு கொண்ட ஒருங்கிணைந்த ஒற்றுமை மேம்பாட்டுக் கட்சி முன்னிலை வகிப்பதாகத் தேர்தல் ஆணையம் சொன்னது.
அது கீழவையின் 96 இடங்களில் 87 இடங்களை வென்றுள்ளது.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
June 24, 2026, 12:46 pm
ஐரோப்பாவை உலுக்கும் கொடிய வெப்ப அலை: உடலை குளிர்விக்க முயன்ற 40 பேர் பரிதாப பலி
June 23, 2026, 5:44 pm
ஹோர்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாடு ஈரானிடமே தொடரும்: காலிபாஃப் அதிரடி அறிவிப்பு
June 22, 2026, 5:14 pm
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலகினார்
June 22, 2026, 4:48 pm
18 மணி நேர தீவிர பேச்சுவார்த்தை நிறைவு: அமெரிக்கா–ஈரான் சந்திப்பில் புதிய திருப்பம்
June 22, 2026, 3:26 pm
ராஸ் லஃபானை உலுக்கிய பயங்கர வெடிப்பு: 54 பேர் காயமடைந்துள்ளனர்
June 22, 2026, 11:41 am
ஸ்காட்லாந்தில் முஸ்லிம்கள் மீது மா்ம நபா் தொடா் தாக்குதல்: பிரதமா் ஸ்டாா்மா் கண்டனம்
June 22, 2026, 11:37 am
சிகாகோ நகரத்தை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: 8 பேர் பலி, 38 பேர் காயம்
June 21, 2026, 10:24 am
