நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் 8 புதிய முதியோர் பரமாரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் 

சிங்கப்பூர்:

2026 ஆம் ஆண்டில் 8 புதிய முதியோர் பராமரிப்பு நிலையங்கள் சிங்கப்பூரில் அமைக்கப்படவிருக்கின்றன.

பொங்கோல் (Punggol), தெம்பனிஸ் (Tampines), சிராங்கூன் (Serangoon), சாங்கி- சீமெய் (Changi-Simei), ஜூரோங் (Jurong) ஆகிய வட்டாரங்களில் அவை அமைந்திருக்கும்.

மக்கள் செயல் கட்சியின் சமூக அறக்கட்டளை
அவற்றை நிர்வகிக்கும். மூத்தோர் சமூகத்தினுள் நலமாக மூப்படைய அந்த நிலையங்கள் உதவும்.

2027ஆம் ஆண்டுக்குள் இதுபோன்ற 25 நிலையங்களை அமைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.

மக்கள் செயல் கட்சியின் சமூக அறக்கட்டளை இதுபோன்ற மூத்தோர் பராமரிப்புச் சேவைகளை விரிவுபடுத்தவுள்ளதாகக் குறிப்பிட்டது.

அதற்காக சுகாதார அமைச்சுடனும் ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்புடனும் இணைந்து பணியாற்றிவருவதாய் அது சொன்னது.

ஆதாரம்: CNA 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset