நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலை ஆற்றங்கரையை சுத்தம் செய்யும் பணி தொடங்கியது: டான்ஸ்ரீ நடராஜா

பத்துமலை:

தைப்பூச விழாவை முன்னிட்டு பத்துமலை ஆற்றங்கரையை சுத்தம் செய்யும் பணி தொடங்கி விரைவாக நடந்து வருகிறது.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா இதனை கூறினார்.

உலகமெங்கும் தைப்பூச விழா வரும் பிப்ரவரி 1ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

மலேசியாவில் பத்துமலை திருத்தலத்தில் இந்த தைப்பூச விழா விமரிசையாக கொண்டாடப்படும்.

வெள்ளி ரத ஊர்வலத்துடன் தொடங்கும் இவ்விழா பல நாட்களுக்கு நீடிக்கும்.

தை மாதம் தொடக்கத்தில் இருந்து பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்வார்கள்.

இதனால் ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்கான தேவஸ்தானம் பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

குறிப்பாக பத்துமலை ஆற்றங்கரை முழுமையாக சுத்தம் செய்யும் பணி இப்போது தொடங்கியது.

சுத்தம் செய்யும் பணியைத் தொடர்ந்து பக்தர்கள் இந்த ஆற்றங்கரையை முழுமையாக பயன்படுத்தலாம்.


குறிப்பாக பக்தர்கள் ஆற்றங்கரையிலும் ஆலய வளாகத்திலும் சுத்தத்தை பேண வேண்டும் என டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset