நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இரத்த தானம் மூலமாக பல உயிர்களை காப்பாற்ற முடியும்: சிவக்குமார்

பத்துகாஜா:

இரத்த தானம் செய்வதின் மூலம் பல உயிர்களை காப்பாற்ற முடியும் என்று பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி. சிவக்குமார் தெரிவித்தார்.

இரத்தானம் செய்வதால் பல சம்பவங்களுக்கு உதவியாக உள்ளது.

குறிப்பாக விபத்துகள், அறுவை சிகிச்சைகள், பிரசவம், புற்றுநோய், தலசீமியா போன்ற நோய்களுக்கு தேவையான இரத்தம் கிடைக்கிறது.

மேலும் அவசர காலங்களில் மருத்துவமனைகளில் இரத்த கையிருப்பு போதுமான அளவில் இருக்கவும் உதவுகிறது.

பத்துகாஜா நாடாளுமன்ற சேவை மையத்தின் ஏற்பாட்டில் நேற்று அலுவலகத்தில் நடைப்பெற்ற இரத்ததானம் முகமை தொடக்கி வைத்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சிவக்குமார் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த இரத்தனாம் முகம் கடந்த 15 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருவதாகவும் இவ்வருடம் நடைபெற்ற முகமில் சுமார் 150 பொதுமக்கள் இரத்ததானம் செய்தது வரவேற்க்கதக்கது.

மேலும் இதில் அதிகமான இளையோர்கள் இரத்ததானம் வழங்கியது இளைஞர்கள் மத்தியில் இரத்ததானம் குறித்து அதிக அளவில்    விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது என அவர் கூறினார்.

இது போன்ற இரத்ததானம் மூகாம் ஆங்காங்கே சமூக நல இயக்கங்கள் நடத்த முன்வர வேண்டும் எனவும் இதனால் மருத்துவமனைகளில் உள்ள இரத்த வங்கிகளில் அதிக அளவில் சேமிப்பு இருக்க உதவி புரியும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset