செய்திகள் மலேசியா
மாணவர்களுக்கான கல்வி உதவி நிதிக்காக அரசாங்கம் 800 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது: வோங்
தைப்பிங்:
நாட்டில் உள்ள மாணவர்களுக்கு தலா 150 ரிங்கிட் உதவி நிதி வழங்க அரசாங்கம் 800 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.
இந்த நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை காட்டிலும் இரட்டிப்பானது என்று கல்வி துணையமைச்சர் வோங் கா வோ கூறினார்.
இத்திட்டத்தின் வழி 52 லட்ச. மாணவர்கள் பயன் பெறுவர்.
இது இன பாகுபாடின்றி அனைத்து மாணவர்களுக்கும் இம்மாதம் 12ஆம் தேதி முதல் இந்த நிதி வழங்கப்படும்.
தைப்பிங்கில் உதயமான தைப்பிங் இந்தியர் கல்வி முன்னேற்றக் கழகத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தப் பின்னர் இவ்வாறு செய்தியாளர்களிடம் பேசினார்.
மாணவர்களின் வளர்ச்சிக்கு சமுக அமைப்புகளின் பங்களிப்பு மிக அவசியம்.
அந்த வகையில் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிட தோற்றுவிக்கப்பட்ட இந்ந அமைப்புக்கு பாராட்டைத் தெரிவித்துக் கொண்டதுடன் 10 ஆயிரம் வெள்ளி மானியம் வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் இனம், மொழி, மதம், வேறுபாடின்றி அனைத்து மாணவர்களுக்கு உதவிகள் வழங்கி வருகிறது.
இருந்தபோதும் அதன் வளர்ச்சிக்கும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் அரசு சாரா இயக்கங்கள் வழங்கி வருவது மேலும் உந்துதலை ஏற்படுத்தும் என்றார்.
தைப்பிங் வட்டாரத்தில் 17 தமிழ்ப்பள்ளிகள் உள்ள அதன் தேவைகளுக்கு தாம் தொடர்ந்து உதவிகள் வழங்கி வருவதாகவும் அப்பள்ளிகளுக்கு கடந்த ஆண்டு மொத்தம் 12 லட்சத்து 90 ஆயிரம் ரிங்கிட் நிதி வழங்கியுள்ளதாக அவர் தகவல் தெரிவித்தார்.
தைப்பிங் வட்டாரத்தில் உள்ள 17 தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மணவர்களுக்கு உதவும் நோக்கத்தில் கடந்த ஆண்டு தைப்பிங் நண்பர்கள் என்று தொடங்கபட்ட இந்த இயக்கம் மக்களின் மகத்தான ஆதரவை பெற்றதால் இன்று அந்ந அமைப்பு தைப்பிங் இந்தியர் கல்வி் முன்னேற்றக் கழகமாக பதிவானது.
தைப்பிங்கில உள்ள நபர்களால் வழங்கப்பட்டட நிதியால் கடந்த ஆண்டு முதல் பல உதவிகள் மாணவர்களுக்கு வழங்கபட்டுள்ளது.
இந்த ஆண்டு மாணவர்களின் வளரச்சிக்கு உதவிகள் வழங்க பல திட்டங்களை இடப்பட்டுள்ளது என்று அதன் தலைவர் வி. பூபாலன் கூறினார்.
இந்த கழகத்தின் ஆலோசகராக இருந்து ஆதரவு வழங்கிய சி. மணிக்கும் ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றிக் கூறப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 5, 2026, 4:11 pm
பேரா மாநிலத்தில் மின் சிகரெட்டுக்கான புதிய விற்பனை உரிமம் புதுப்பிக்கப்படாது: சிவநேசன்
January 5, 2026, 4:05 pm
உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினர்களாக புவனேஸ்வரன் உட்பட 23 பேர் பதவியேற்றனர்
January 5, 2026, 4:01 pm
இனம், மதத்தை அரசியல் மூலதனமாகப் பயன்படுத்தி அக்மால் விளையாடுகிறார்: டாக்டர் சத்தியபிரகாஷ் சாடல்
January 5, 2026, 3:56 pm
பிரதமரின் பதவிக்காலத்தை கட்டுப்படுத்தும் மசோதாவை அரசு தாக்கல் செய்ய உள்ளது: பிரதமர் அன்வார்
January 5, 2026, 3:08 pm
பிரதமரின் 2026 புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மக்களுக்கான முக்கிய அறிவிப்புகள்
January 5, 2026, 2:19 pm
100 ரிங்கிட் சாரா உதவித் தொகை; பிப்ரவரி 9ஆம் தேதி வழங்கப்படும்: பிரதமர்
January 5, 2026, 12:58 pm
சபா, சராவாக் மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு
January 5, 2026, 12:53 pm
