நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதற்கு ஜசெக மற்றவர்களின் வழியைப் பின்பற்றத் தேவையில்லை: அந்தோனி லோக்

மலாக்கா:

அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதற்கு ஜசெக மற்றவர்களின் வழியைப் பின்பற்றத் தேவையில்லை.

ஜசெக தலைமை செயலாளர் அந்தோனி லோக் இதனை கூறினார்.

எந்தவொரு தனிநபரின் கட்டளைகளையும் பின்பற்றவோ அல்லது அரசியல் ஆத்திரமூட்டல்களுக்கு ஜசெக அடிபணியவோ தேவையில்லை.

அதே வேளையில் ஒற்றுமை அரசாங்கத்தில் அதன் நிலைப்பாட்டை கட்சியே தீர்மானிக்கும்.

குறிப்பாக மத்திய செயற்குழுவிற்கு  தெரிவிக்கப்படுவதற்கு முன்பு பிரதிநிதிகளால் மேலும் விவாதம் நடத்தப்படும்.

நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், நமது கட்சியின் திசை, நமது கட்சியின் முடிவுகள் மற்றவர்களின் முடிவில் இல்லை,

நாம் ஆறு மாதங்களில் பார்க்க வேண்டும்.

முக்கியமானது என்னவென்றால், கட்சிக்கு மட்டுமல்ல, நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் வாக்காளர்களுக்கும் சிறந்த முடிவை எடுப்பதுதான். அதுதான் மிக முக்கியமான விஷயம்.

25ஆவது ஜசெக மலாக்கா ஆண்டு மாநாட்டில் ஆற்றிய  உரையில் அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset