செய்திகள் மலேசியா
நாய்கள் துரத்தியதால் லோரியில் மோதிய மோட்டார் சைக்கிளோட்டி மரணம்: மனைவி, குழந்தை படுகாயம்
குளுவாங்:
நாய்கள் துரத்தியதால் லோரியில் மோதிய மோட்டார் சைக்கிளோட்டி மரணமடைந்தார்.
குளுவாங் போலிஸ் தலைவர் பஹ்ரின் முஹம்மது நோ இதனை தெரிவித்தார்.
நேற்று, குளுவாங்கில் நாய்களால் துரத்தப்படுவதைத் தவிர்க்க முயன்ற மோட்டார் சைக்கிள் லோரியின் பின்புறத்தில் மோதியதில் ஒருவர் இறந்தார்.
அவரது மனைவி, 20 மாத குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளனர்.
மாச்சாப் தாமான் முர்னி ஜெயாவில் இரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட முஹம்மது அமிருல் அசிம் ஹம்தான் (28) சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
அவரது மனைவி நூர் ஹைதா முஹம்மது பஸரி (28), அவர்களது குழந்தை என்சே பெசார் ஹஜ்ஜா கல்சம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர் தாசேக் மச்சாப்பிலிருந்து தாமான் முர்னி நோக்கிச் சென்றபோது இந்த சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 5, 2026, 4:11 pm
பேரா மாநிலத்தில் மின் சிகரெட்டுக்கான புதிய விற்பனை உரிமம் புதுப்பிக்கப்படாது: சிவநேசன்
January 5, 2026, 4:05 pm
உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினர்களாக புவனேஸ்வரன் உட்பட 23 பேர் பதவியேற்றனர்
January 5, 2026, 4:01 pm
இனம், மதத்தை அரசியல் மூலதனமாகப் பயன்படுத்தி அக்மால் விளையாடுகிறார்: டாக்டர் சத்தியபிரகாஷ் சாடல்
January 5, 2026, 3:56 pm
பிரதமரின் பதவிக்காலத்தை கட்டுப்படுத்தும் மசோதாவை அரசு தாக்கல் செய்ய உள்ளது: பிரதமர் அன்வார்
January 5, 2026, 3:08 pm
பிரதமரின் 2026 புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மக்களுக்கான முக்கிய அறிவிப்புகள்
January 5, 2026, 2:19 pm
100 ரிங்கிட் சாரா உதவித் தொகை; பிப்ரவரி 9ஆம் தேதி வழங்கப்படும்: பிரதமர்
January 5, 2026, 12:58 pm
சபா, சராவாக் மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு
January 5, 2026, 12:53 pm
