நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒற்றுமை அரசாங்கத்தில் அம்னோ, தேசிய முன்னணியின் நிலைப்பாட்டை உச்சமன்றம் தீர்மானிக்கும்: ஜம்ரி

மஞ்சோங்:

ஒற்றுமை அரசாங்கத்தில் அம்னோ, தேசிய முன்னணியின் நிலைப்பாட்டை உச்சமன்றம் தீர்மானிக்கும்.

தேசிய முன்னணி தலைமை செயளாளர் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காடிர் இதனை கூறினார்.

அம்னோ, தேசிய முன்னணியின் வழிகாட்டுதலுக்கான முன்மொழிவுகள் அல்லது கோரிக்கைகள் குறிப்பாக ஒற்றுமை அரசாங்கத்தில் நிலைப்பாடு தொடர்பாக உச்சமன்ற செயற்குழு வழியாக செல்ல வேண்டும். இதனால் முடிவுகள் முதிர்ச்சியுடன் எடுக்கப்படுகின்றன.

எந்தவொரு அம்னோ உறுப்பினர் அல்லது தலைவரும் குரல் கொடுக்கும் எந்தவொரு கருத்துகள், நடவடிக்கைகள் அல்லது பரிந்துரைகளும் கட்சி உச்சமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

அம்னோ இளைஞர் தலைவர் டத்தோ டாக்டர் முகமது அக்மல் சலே, அம்னோ ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து விலகி எதிர்க்கட்சியாக மாற வேண்டும் என கூறியுள்ளார்.

ஆனால் இந்த அழைப்பை உச்சமன்றம் மூலம் விடுக்க வேண்டும்.

அம்னோ இளைஞர் கட்சியில் அவரது கருத்து இதுதான். அம்னோ கட்டமைப்பிற்குள், எந்தவொரு நடவடிக்கைகளும் அல்லது பரிந்துரைகளும் உச்சமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என்பதை அவர் அறிவார் என்று ஜம்ரி கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset