நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இலங்கை பாடப்புத்தகத்தில் ஓரினச் சேர்க்கை குறித்து பாடம்: பெற்றோர் அதிர்ச்சி 

கொழும்பு: 

இலங்கை அரசாங்கம் பள்ளிப் பாடத்திட்ட இணையப் பக்கத்தில் ஏற்பட்ட ஓரினச் சேர்க்கை பற்றிய விவரம் பகிரப்பட்டுள்ளது குறித்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்துக் குற்றவியல் விசாரணை நடைபெறுகிறது.

11 - 12 வயது மாணவர்களின் ஆங்கிலப் பயிற்சிக்கான இணையத் தளம் அவர்களைத் தவறுதலாக ஓரினச் சேர்க்கை குறித்த தகவல் நிறைந்த பக்கத்துக்குக் கொண்டு சென்றது.

அது குறித்து இலங்கைக் கல்வியமைச்சுக் காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறது.

6ஆம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் கடிதம் எழுதும் நண்பர்களைத் தேடுவது பாடத்திட்டத்தின் ஒரு பகுதி.

ஆனால் அதைச் செய்யும்போது மாணவர்கள் தவறான இணையப்பக்கத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அந்த இணையப்பக்கத்தைத் தடை செய்யும்படி அதிகாரிகள் இணையச் சேவை வழங்குபவர்களிடம் உத்தரவிட்டுள்ளனர்.

புதிய பாடத் திட்டம் வகுப்பதில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதை நடைமுறைப்படுத்தும்போது சதி நடந்திருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்.

அலுவலக அளவில் விசாரணை தொடரும் வேளையில் இலங்கை தேசியக் கல்விக் கழகத் தலைவர் பதவி விலகிவிட்டார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset