செய்திகள் உலகம்
மழையும் பனியும் கொண்டுவந்த பேராபத்து: ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளம்
காபூல்:
ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் பெய்த கனமழையும் பனிப்பொழிவும், நீண்டகால வறட்சிக்கு முடிவுகொடுத்திருந்தாலும், அதே நேரத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 17 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 11 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹெராத் ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் முஹம்மது யூசுப் சயீதி கூறுகையில், ஹெராத் பகுதியிலுள்ள கப்கான் மாவட்டத்தில், வீட்டு கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். அவர்களில் இருவர் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கள்கிழமை முதல், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டது.
மோசமான வானிலை காரணமாக, நாட்டின் மத்திய, வடக்கு, தெற்கு, மேற்கு பகுதிகளில் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ANDMA) செய்தித் தொடர்பாளர் முகமது யூசுப் ஹம்மாத், கூறுகையில், வெள்ளம் காரணமாக அடித்தள வசதிகள் சேதமடைந்துள்ளன.
இதனால் சுமார் 1,800 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், ஏற்கனவே பாதிப்புக்கு உள்ளாகிய நகர்ப்புற மக்களும், கிராமப்புற மக்களின் நிலை மேலும் மோசமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மதிப்பீட்டு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன என்றும், மேலதிக நிவாரண தேவைகளை கண்டறிய ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
- கிரித்திகா
தொடர்புடைய செய்திகள்
January 2, 2026, 5:59 pm
இலங்கை சாலைகள் பாதுகாப்பற்றவையா?: 2025-இல் அதிகரித்த உயிரிழப்புகள்
January 2, 2026, 5:29 pm
சுவிட்சர்லந்து மதுக்கூடத்தில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்தது
January 2, 2026, 4:02 pm
தாய்லாந்தில் சட்டவிரோதமாக இயங்கிய சூதாட்டக் கூடத்திலிருந்து இரண்டு சிங்கங்கள் மீட்பு
January 1, 2026, 9:05 pm
ஆம்ஸ்டர்டாமின் வரலாற்று சிறப்புமிக்க தேவாலயம் தீ பிடித்தது
January 1, 2026, 5:51 pm
ஜொஹ்ரான் மம்தானி திருக்குர்ஆன் மீது சத்தியம் செய்து பதவியேற்றார்
January 1, 2026, 11:39 am
சிங்கப்பூரில் களை கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்
December 30, 2025, 10:03 pm
கலீதா ஜியா மறைவுக்கு வங்கதேசத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்: தலைமை ஆலோசகர் முஹம்மது யூனுஸ் அறிவிப்பு
December 30, 2025, 4:54 pm
