நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சுவிட்சர்லந்து மதுக்கூடத்தில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது 

பெர்ன்:

சுவிட்சர்லந்தில் உள்ள மதுக்கூடத்தில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் மாண்டோரை அடையாளம் காணும் பணிகள் தொடங்கியுள்ளன.

சம்பவத்தில் சுமார் 40 பேர் மாண்டனர். பெரும்பாலானோர் இளம் வயதினர். அந்த சம்பவத்தில் 115 பேர் காயமுற்றனர்.

அவர்களில் பலருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருந்ததாக அந்தப் பகுதியின் காவல்துறைத் தலைவர் தெரிவித்தார்.

பனிச்சறுக்கிற்குப் பிரபலமான கிரான் மோண்டானா (Crans-Montana) நகரில் மதுக்கூடம் அமைந்துள்ளது.

வெடிப்பு ஏற்பட்டுத் தீ மிக வேகமாகப் பரவியதாக உயிர்தப்பியவர்கள் தெரிவித்தனர்.

மாண்டோருக்காக நடத்தப்பட்ட சிறப்பு அஞ்சலிக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இது சுவிட்சர்லந்து சந்தித்த மிக மோசமான துயரங்களில் ஒன்று என்று புதிய அதிபர் கீ பார்மிலின் (Guy Parmelin) கூறியுள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset