நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தாய்லாந்தில் சட்டவிரோதமாக இயங்கிய சூதாட்டக் கூடத்திலிருந்து இரண்டு சிங்கங்கள் மீட்பு

பேங்காக்:

தாய்லாந்தில் சட்டவிரோதமாக இயங்கிய சூதாட்டக் கூடத்திலிருந்து இரண்டு சிங்கங்கள் மீட்கப்பட்டுள்ளன.

டிராட் (Trat) மாநிலத்தில் கடந்த மாதம் 22ஆம் தேதி கடற்படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவை கண்டுபிடிக்கப்பட்டன.

3 ஆசியக் கருங்கரடிகளும் சூதாட்டக் கூடத்தில் கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்தன. அவை (Bang Lamung) பாங் லமுங் வனவிலங்கு இனப்பெருக்க நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அதிகாரிகள் உடனடியாகத் தேசியப் பூங்கா, வனவிலங்கு, தாவரப் பாதுகாப்புத் துறைக்குத் தகவல் தந்தனர்.

கிறிஸ்துமஸ் அதிகாலையில் இரண்டு சிங்கங்களும் ரட்சாபூரி (Ratchaburi) மாநில வனவிலங்கு சரணாலயத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அங்குப் பெண் சிங்கத்துக்கு "மேரி" (Merry) என்றும் ஆண் சிங்கத்துக்குக் "கிறிஸ்துமஸ்" (Christmas) என்றும் பெயர் சூட்டப்பட்டது.

திடீர் இடமாற்றத்தால் சோர்வடைந்துள்ள சிங்கங்களின் உடல்நலத்தைப் பரிசோதிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும் என்று மருத்துவர்கள் கூறினர்.

அதேவேளை சுற்றுப்புறத்தோடு அவை ஒன்றிப்போக உரிய உதவி செய்யப்படும் என்று சரணாலய நிர்வாகம் சொன்னது.

ஆதாரம்: பேங்காக் போஸ்ட் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset