நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஆம்ஸ்டர்டாமின் வரலாற்று சிறப்புமிக்க தேவாலயம் தீ பிடித்தது

ஆம்ஸ்டர்டாம்:

ஆம்ஸ்டர்டாமின் வரலாற்று 
சிறப்புமிக்க வொண்டெல்கெர்க் தேவாலயம் 2026 புத்தாண்டு பிறந்த இரவில் தீப்பிடித்தது.

154 ஆண்டு பழமையான அந்த தேவாலயக் கட்டடம் தீவிபத்தில் முற்றிலும் அழிந்தது. 

உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:30 மணியளவில் தொடங்கிய தீ, தேவாலய கோபுரத்தில் பரவி முழுக் கட்டடத்தையும் சேதத்தை ஏற்படுத்தியது. 

அருகிலுள்ள வீடுகளை விட்டு பொதுமக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். கடும் புகை காரணமாக குடியிருப்பவர்களை தீயணைப்புத் துறை  எச்சரித்தது.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது, ஆனால் இது தேவாலய கூரையில் தொடங்கியதாக நம்பப்படுகிறது. 

1977 வரை ரோமன் கத்தோலிக் தேவாலயமாக இருந்த வொண்டெல்கெர்க், தற்போது பிரார்த்தனை நிகழ்வுகள், சிறு வணிகங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த தேவாலயம் முன்பு 1904ஆம் ஆண்டில் மின்னல் தாக்கி அதன் கோபுரம் அழிந்தது, பின்னர் பழுதுபார்க்கப்பட்டது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset