நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் களை கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம் 

சிங்கப்பூர்:

சிங்கப்பூரர்கள் புத்தாண்டைக் கொண்டாட்டத்துடன் வரவேற்றனர்.

சிலோசோ கடற்கரை , காலாங், மரினா பே (Marina Bay) உள்ளிட்ட பல பகுதிகளில் தீவு முழுவதும் பத்தாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.

சிலோசோ கடற்கரையில் புத்தாண்டை வரவேற்கப் பத்து நிமிடங்கள் வாணவேடிக்கைகள் நீடித்தன.

அங்கு முதன்முறையாக நடத்தப்பட்ட கவுண்ட்டவுன் (countdown) நிகழ்ச்சியில் 15,000க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர்.

கொண்டாட்டங்களுக்கு இடையே, நிகழ்ச்சிகள் பாதுகாப்பாகவும் சீராகவும் நடைபெறுவதை அதிகாரிகள் உறுதிசெய்தனர்.

மரினா பே பகுதியில், உடற்குறையுள்ள கலைஞர்கள் உருவாக்கிய சிறப்பு கலைப்படைப்புகள் கட்டடங்களில் ஒளிரவிடப்பட்டிருந்தன.

The Kallangஇல் புதுபிப்புப் பணிகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட முதல் கவுண்ட்டவுன் நிகழ்ச்சியில், குடும்பங்களுக்கு ஏற்ற நேரடி கலைநிகழ்ச்சி வழங்கப்பட்டன.

பொங்கோல் (Punggol) பகுதியிலும் புத்தாண்டை வரவேற்க மக்கள் கூடினர்.

மொத்தம் ஏழு குடியிருப்புப் பேட்டைகளில் நடைபெற்ற கவுண்ட்டவுன் நிகழ்ச்சிகளில் அதுவும் ஒன்று. .

மக்கள் கழகம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களையும் அதிகாரிகளையும் தீவெங்கிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியது.

ஆதாரம்: Mediacorp 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset