நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இசைமுரசு நாகூர் இ.எம். ஹனிஃபா நூற்றாண்டு விழா: ராயல் கிங்ஸ் சிராஜுத்தீனுக்கு ஆதரவாளர் விருது வழங்கி சிறப்பிப்பு

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில், இசை முரசு நாகூர் இ. எம். ஹனிஃபா அவர்களின் நூற்றாண்டுப் பெருவிழாவை கொண்டாடும் முகமாக இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த ஞாயிறு டிசம்பர் 28 ந்தேதி கிரேட்டா ஆயர் மக்கள் அரங்கில், 
சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் ஏற்பாட்டில் சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை ஆதரவில் மாபெரும் நிகழ்ச்சி நடந்தேறியது. 

முன்னதாக நிகழ்ச்சி இறையன்பன் குத்தூஸின் இறை வாழ்த்துப் பாடலுக்குப்பின் ஏற்பாட்டுக்குழு தலைவரும், சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் துணைத்தலைவருமான மு. அ. மசூது அனைவரையும் வரவேற்று , நிகழ்ச்சியின் ஆதரவாளர்கள், பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். 

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மேனாள் மூத்த துணையமைச்சர் ஹாஜி ஜைனுல் ஆப்தீன் ரஷீத் , கலை, கலாச்சாரத்திற்கு பங்களிப்பு செய்த ஐவருக்கு கலாச்சார விருதுகளை வழங்கினார். அதோடு நிகழ்ச்சியின் ஆதரவாளர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன. 

பிரதான ஆதரவாளரான ராயல் கிங்ஸ் குழுமத்தின் தலைவர்  சிராஜுத்தீன் பின் செய்யது முஹம்மது ஆதரவாளர் விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டார்.

கலைமாமணி இறையன்பன் குத்தூஸ் தலைமையில், சூப்பர் சிங்கர் புகழ் பாடகி ஃபரீதா, யுடியூப் புகழ் ரஹீமா, சிங்கப்பூர் பாடகர் இர்ஃபானுல்லாஹ் ஆகியோர் இசை முரசு ஹனிஃபா அவர்களின் பிரசித்தி பெற்ற பாடல்களை பாடினர்.  

நிகழ்ச்சி நெறியாளுகை செய்த ஸதக்கத்துல்லாஹ் ஒவ்வொரு பாடலைப் பற்றியும் இரத்தினச் சுருக்கமாக இணைப்புரை வழங்கிய விதம் அனைவரையும் கவர்ந்தது. ஏறத்தாழ 700 பார்வையாளர்கள் குதூகலமாக கலந்து கொண்டு பாடல்களை ரசித்தனர். 

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset