நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மெக்சிகோவில் மோசமான ரயில் விபத்து: 13 பேர் மரணம்

மெக்சிகோ சிட்டி:

மெக்சிகோவின் ஒக்ஸாகா (Oaxaca) மாநிலத்தில் ரயிலின் ஒரு பகுதி தடம்புரண்டதில் 13 பேர் மாண்டனர். விபத்தில் 98 பேர் காயமுற்றனர்.

அந்த ரயிலில் சுமார் 250 பேர் பயணம் செய்துகொண்டிருந்தனர்.

பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தாருக்கு உதவ கடற்படை செயலாளரும் மூத்த அதிகாரிகளும் சம்பவ இடத்திற்குச் செல்வர் என்று மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷேன்பாம் (Claudia Sheinbaum) கூறினார்.

அந்த ரயில் பாதையை மெக்சிகோவின் கடற்படை நிர்வகிக்கிறது.

விபத்தின் காரணத்தை அறிய விசாரணை தொடங்கப்படும் என்று நாட்டின் தலைமைச் சட்ட அதிகாரியின் அலுவலகம் தெரிவித்தது.

மெக்சிகோ வளைகுடாவுக்கும் பசிபிக் பெருங்கடலுக்கும் இடையே அந்த ரயில் பயணம் செய்கிறது. அதில் சரக்குகளும் ஏற்றிச் செல்லப்படுகின்றன.

ஆதாரம் : AFP

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset