நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தோக்கியோ மிருகக்காட்சி சாலையில் இருந்து தப்பியோடிய ஓநாய்

தோக்கியோ:

ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் மிருகக்காட்சி சாலையில் இருந்து  ஓநாய் ஒன்று தப்பியது.

சம்பவம் இன்று காலை 10 மணியளவில் தாமா விலங்கியல் தோட்டத்தில் நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

விலங்குப் பராமரிப்பாளர் ஒருவர் ஓநாயை அதன் கூண்டில் காணவில்லை என்பதை அறிந்ததும் நிர்வாகத்துக்குத் தகவல் தந்தார்.

பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி நுழைவுச்சீட்டு விற்பனை உடனே நிறுத்தப்பட்டது.

விலங்கியல் தோட்டத்தினுள் ஏற்கனவே சென்றவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் சென்று ஒளிந்துகொள்ளுமாறு எச்சரிக்கப்பட்டனர்.

பிற்பகல் சுமார் 2.30 மணிக்கு ஊழியர்கள் ஓநாயைப் பிடித்துவிட்டனர். சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset