செய்திகள் உலகம்
சீனாவில் 2 விநாடிகளில் 700 கி.மீ. வேகத்தில் பறந்த ரயில்: புதிய உலக சாதனை
பெய்ஜிங்:
சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் நடத்திய சோதனையில் அது சாத்தியமானது.
‘மேக்னெடிக் லெவிடேஷன்' எனப்படும் காந்தப்புல தொழில்நுட்பத்தின் அடிப்படையில் 1 டன் எடை கொண்ட ரயிலை இயக்கி சோதனை நடத்தினர். இதில் வெறும் 2 விநாடிகளில் அந்த ரயில் மணிக்கு 700 கி.மீ. வேகத்தை எட்டி உலக சாதனை படைத்தது.
காந்த சக்தியின் உதவியுடன் ரயில் தடத்துக்குமேல் சற்று உயர்த்தப்பட்டது. அதனால் ரயில் தடத்துடன் உரசாமல் வேகமாகச் செல்லமுடிந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
400 மீட்டர் (1,310 அடி) நீளமுள்ள காந்தப்புல ரயில் பாதையில் இந்த சோதனை நடத்தப்பட்டது, மேலும் 700 கி.மீ. வேகத்தை அடைந்த பிறகு ரயில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. இதன் மூலம் இதுவரை உருவாக்கப்பட்ட காந்தப்புல ரயில்களில் அதிக வேகம் கொண்ட ரயில் என்ற பெருமையை இது பெற்றது.
இந்த ரயில், தண்டவாளங்களைத் தொடாமல், அதன் மேலே காந்த விசையில் செல்லக்கூடியது. இதன் முடுக்கம் மிகவும் சக்தி வாய்ந்தது. ஒரு ராக்கெட்டை ஏவும் அளவு சக்தி வாய்ந்தது. இந்த வேகத்தில் நீண்ட தொலைவில் உள்ள நகரங்களை சில நிமிடங்களில் இந்த ரயில்கள் மூலம் நாம் இணைக்க முடியும்.
இந்த சாதனையை படைத்த ஆராய்ச்சியாளர்கள் குழு கடந்த 10 ஆண்டுகளாக இந்தத் திட்டத்தில் பணியாற்றி வருகிறது.
ஆதாரம்: South China Morning Post
தொடர்புடைய செய்திகள்
December 28, 2025, 10:38 am
சிங்கப்பூர் காவல்துறையின் ஆண்டிறுதிச் சோதனைகளில் 546 பேர் கைது
December 27, 2025, 6:01 pm
பள்ளிவாசல் இமாம்கள், முஅத்தின்கள் இனி அரசு ஊழியர்கள்: ஷார்ஜா அரசு அறிவிப்பு
December 27, 2025, 9:02 am
உம்ரா விசாவில் மக்காவில் பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்களுக்கு வெளிநாடு செல்ல பாகிஸ்தான் அரசு தடை
December 26, 2025, 5:10 pm
நைஜீரியா நாட்டு பள்ளிவாசலில் வெடிகுண்டு தாக்குதல்: 5 பேர் பலி
December 25, 2025, 5:44 pm
கலிபோர்னியாவில் விரைவில் கடுமையான புயல், வெள்ளம் ஏற்படும்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு
December 25, 2025, 12:13 pm
முன்னாள் வழக்கறிஞர் M ரவியின் மர்ம மரணம்: அவருக்கு போதைப்பொருள் கொடுத்த நபர் கைது
December 23, 2025, 4:33 pm
கிறிஸ்துமஸை ஒட்டி சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள்
December 22, 2025, 8:32 am
