நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் காவல்துறையின் ஆண்டிறுதிச் சோதனைகளில் 546 பேர் கைது

சிங்கப்பூர்:

காவல்துறை நடத்திய ஆண்டிறுதிச் சோதணை நடவடிக்கைகளில் 546 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம், சுகாதார அறிவியல் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளும் சோதனையில் இணைந்தன.

மொத்தம் 4,500க்கும் அதிகமான அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனையின் முக்கிய நோக்கம் சட்டவிரோத நடவடிக்கைகளை முடக்குவது.

நவம்பர் 22ஆம் தேதி தொடங்கிய சோதனை 4 வாரங்கள் நீடித்தது. இந்த சோதனை நடவடிக்கையின் போது 1,771 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது வெவ்வேறு குற்றங்கள் தொடரில் பலர் கைதுசெய்யப்பட்டனர்.

போக்குவரத்துக் குற்றங்கள் தொடர்பில் 14 ஓட்டுநர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களில் 10 பேர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாகச் சொல்லப்பட்டது.

மின்சிகரெட் வைத்திருந்ததாக 8 பேர் பிடிபட்டனர்.

அவர்களிடமிருந்து மின்சிகரெட், அது சம்பந்தப்பட்ட பாகங்கள் என மொத்தம் 37 பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

உடற்பிடிப்பு நிலையங்கள், பொழுதுபோக்கு விடுதிகள் உள்ளிட்ட இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை தொடர்கிறது.

ஆதாரம்: 8 World

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset