நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெருவெள்ள அச்சுறுத்தல்; தொடர்புத் தளங்களை காக்க தயார்நிலை: ஃபஹ்மி ஃபட்ஸில்

புத்ராஜெயா:

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பெருவெள்ளம் ஏற்படும் சாத்தியக்கூறு உள்ள நிலையில், தொடர்புச் சேவைகளின் இணைப்புகள் தடையின்றி செயல்படுவதை உறுதிப்படுத்துவதற்கு, தொடர்பு அமைச்சகம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருவதாக டத்தோ  ஃபஹ்மி ஃபட்ஸில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நெட்வொர்க் டவர் இணைப்புகளை விரைவாக மீட்டெடுப்பதை உறுதிப்படுத்துவதுடன், பாதிப்படைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதே அமைச்சகத்தின் முக்கிய நோக்கம் என அவர் கூறினார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிளாந்தானில் பல மாவட்டங்களை தாக்கிய பெருவெள்ளம் பல முக்கியமான படிப்பினையை உணர்த்தியுள்ளது என்று ஃபாமி ஃபட்ஸில் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள், நெட்வொர்க் டவர் கட்டமைப்பின் வழங்குநர்களுடன் நெருக்கமான ஒத்துழைப்பின் மூலம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தி வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

“ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது, பல தொடர்பு. இணைய சேவை கோபுரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதுடன், நிலத்தடியில் உள்ள கேபிள்களும் சேதமடைந்தன. இதனால்தான், அனைத்து தரபினர்களும் எச்சரிக்கையுடன் தயார் நிலையில் இருக்குமாறு நான் உத்தரவிட்டுள்ளேன்,” என அவர் கூறினார்.

மின்சாரமும் ஃபைபர் நெட்வொர்க்கும் செயல்படத் தொடங்கியவுடன், பாதிக்கப்பட்ட நெட்வொர்க் டவர்கள் விரைவாகச் சீரமைக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்படும் என்று தொடர்பு அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும், தொடர்பு கோபுர பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், உயர்ந்து வரும் நீர்மட்டங்களால் சேதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில், மின் வாரியமும் (TNB) மின்விநியோக பலகைகள் உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, நல உதவிகளை வழங்குவதற்காக, மடானி எஹ்சான் சேவை படை, மடானி எஹ்சன் அணி அமைச்சகத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் பேரிடர் நிதி மூலமாக, அமைச்சகமும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களும் உதவி செய்ய எப்போதும் தயார்நிலையில் இருப்பதாக ஃபஹ்மி தெரிவித்தார்.

அண்மைய வெள்ளங்களால் பாதிக்கப்பட்ட பலரை அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளதாகவும், முழுமையான எண்ணிக்கை புதுப்பிக்கப்பட்டு தற்போது இறுதி செய்து கொண்டிருக்கும் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

- கிருத்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset