நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எந்த பதவியும் இல்லாமல் மஇகாவை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஒரே தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

எந்த பதவியும் இல்லாமல் மஇகாவை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஒரே தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்.

மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

மஇகாவின் தேசியத் தலைவரான டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

தேசியத் தலைவரின் பிறந்தநாளை கொண்டாடுவது மஇகாவின் பாரம்பரியமாகும்.

அதன் அடிப்படையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு ஒட்டுமொத்த மஇகாவினர் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மஇகாவின் தலைவராக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பொறுப்பேற்றார்.

பல சீரிய சிந்தனை, திட்டங்களின் வாயிலாக கட்சியை வெற்றிகரமாக அவர் வழிநடத்தி வருகிறார்.

அரசாங்கத்தில் இடம், பதவி இல்லை என்றாலும் அவர் கட்சியை வலுவாகவும் கட்டுக்கோப்புடன் அவர் வைத்துள்ளார்.

இது தான் அவரின் மிகப் பெரிய சாதனையாகும்.

ஆக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் மஇகா தொடர்ந்து முன்னோக்கி செல்லும்.

அவருக்கு துணையாக ஒட்டுமொத்த கட்சியும் உள்ளது என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset