நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா துப்பாக்கிச் சூடு வழக்கு; போலிஸ் இன்று ஏஜிசியிடம் அறிக்கை சமர்ப்பிக்கும்: பிரதமர்

கோலாலம்பூர்:

மலாக்கா துப்பாக்கிச் சூடு வழக்கு தொடர்பான அறிக்கையை போலிஸ் இன்று ஏஜிசியிடம் சமர்ப்பிக்கும்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

கடந்த மாதம் மலாக்காவில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பான அறிக்கையை மேலதிக நடவடிக்கைகளுக்காக இன்று சட்டத்துறை தலைவரிடம் போலிஸ்  சமர்ப்பிக்கும்.

எந்தவித சமரசமும் இல்லாமல் முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலித் இஸ்மாயிலிடமிருந்து தனக்கு உத்தரவாதம் கிடைத்ததாக பிரதமர் கூறினார்.

மேலும் நடவடிக்கைக்காக இன்று ஏஜிசியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது என்று அவர் இன்று மேலவையில் நடந்த கேள்வி பதில் அமர்வின் போது கூறினார்.

முன்னதாக நவம்பர் 24 ஆம் தேதி, டுரியான் துங்காலில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில் 24 முதல் 29 வயதுக்குட்பட்ட மூன்று குற்றவாளிகளில் ஒருவர் ஒரு போலிஸ் அதிகாரியை அரிவாளால் தாக்கியதை அடுத்து, அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset