நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மனிதவள அமைச்சராக நியமனம்; என் மீதான நம்பிக்கைக்கு பிரதமருக்கு நன்றி: டத்தோஸ்ரீ ரமணன்

புத்ராஜெயா:

மனிதவள அமைச்சராகப் பொறுப்பேற்க எனக்கு அளிக்கப்பட்ட நம்பிக்கைக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு எனது  நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

மடானி மலேசியாவின் விருப்பங்களுக்கு ஏற்ப நாட்டின் மனிதவள மேம்பாட்டு நிகழ்ச்சி நிரல் விரிவான முறையில் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் போட்டித்தன்மையுடனும் இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு பெரிய பொறுப்பாக இந்த நியமனம் உள்ளது.

நாட்டில் உள்ள இந்திய சமூகத்தையும் நான் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன்.

மேலும் மனிதவள அமைச்சராகப் பொறுப்பேற்க எனக்கு இந்த ஆணையை வழங்கிய பிரதமருக்கு எனது நன்றி.

பதவியேற்பு செயல்முறைக்குப் பிறகு, விரைவில் கெசுமாவின் உயர் தலைமையுடனும் ஒரு சந்திப்பை நடத்துவேன்.

மடானி மலேசியாவின் யோசனைக்கு ஏற்ப இந்திய சமூகம் உட்பட மலேசியர்கள், நாட்டின் நம்பிக்கைகளை உறுதி செய்வதற்காக முழு அர்ப்பணிப்புடன் இந்தக் கடமைகளையும் பொறுப்புகளையும் நான் நிறைவேற்றுவேன்.

இந்த சந்தர்ப்பத்தில், தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சு, அதன் அனைத்து பணியாளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

குஸ்கோப்பில் நான் பணியாற்றிய கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளில், இந்திய சமூகத்தின் பொருளாதார மேம்பாட்டு நிகழ்ச்சி நிரலை வலுப்படுத்த அனைத்து நிறுவனங்களாலும் எனக்கு வலுவான ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset