நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஸ்டீவன் சிம், தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவுத் துரையின் அமைச்சரானார்: அக்மல் நாஸிர் பொருளாதார அமைச்சராக நியமனம்

புத்ரஜெயா: 

அமைச்சரவை மறுசீரமைப்பில் பிரதமர் அன்வார் இப்ராஹிம், தித்திவங்சா எம்பி ஜோஹாரி கனியை முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சராக பதவி உயர்வு அளித்துள்ளார்.

இதற்கிடையில், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட டாக்டர் ஜலிஹா முஸ்தபாவுக்குப் பதிலாக, செகாம்புட் எம்பி ஹன்னா யோஹ், பிரதமர் துறையின் கீழ் கூட்டாட்சி பிரதேச அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுங்கை பெட்டானி எம்பி தௌஃபிக் ஜோஹாரி, ஹன்னா யோஹ்-விடம் இருந்து இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.

அதே நேரத்தில் ஜோஹாரியின் முந்தைய தோட்ட மூலப் பொருட்கள் அமைச்சகம் இப்போது வனிதா அம்னோ தலைவர் நோரைனி அஹ்மதுக்கு செல்கிறது.

டிஏபியின் ஸ்டீவன் சிம், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

பிகேஆர் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் ராமகிருஷ்ணன் மனிதவள இலாகா அமைச்சராகிறார்.

கடந்த மாதம் ராஜினாமா செய்த அப்கோ தலைவர் எவோன் பெனடிக் பதவி விலகியதால் காலியாக இருந்த பதவியை சிம் நிரப்புகிறார்.

பிகேஆரின் ஜோகூர் பாரு எம்பி அக்மல் நாசிர், பொருளாதார அமைச்சராகிறார்.

சபா பிகேஆர் தலைவர் முஸ்தபா சக்முத் சபா, சரவாக் விவகார அமைச்சரானார். அவர் முன்பு துணை உயர்கல்வி அமைச்சராக இருந்தார்.

தற்போதைய  மத விவகார அமைச்சரான நயிம் மொக்தர்  அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

- பார்த்திபன் நாகராஜன்
 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset