நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமுதாயத்தை ஒரு குடையின் கீழ் இணைப்பதே மஇகாவின் அடுத்த இலக்கு: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்:

இந்திய சமுதாயத்தை ஒரு குடையின் கீழ் இணைப்பதே மஇகாவின் அடுத்த இலக்கு.

அக்கட்சியின் தேசியத் தலைவர்  டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.

பல நெருக்கடிகளுக்கு பின் மஇகா மீண்டும் வலுவான நிலைக்கு திரும்பியுள்ளது.

கட்சியின் தலைமைத்துவம் முதல் அடிமட்ட உறுப்பினர் வரை கட்சி வலுவடைந்துள்ளது.

அதே வேளையில் மஇகா புதிய தலைமையகத்தின் கட்டுமான பணி விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த கட்டிடம் முழுமை பெற்றால் கட்சிக்கு மிகப் பெரிய வருமானத்தை ஈட்டித் தரும்.

இதனால் வரும் காலங்களில் மஇகா யாரையும் நம்பியிருக்க வேண்டியது இல்லை.

இதை தவிர்த்து எம்ஐஇடி, ஏம்ஸ்ட் பல்கலைக்கழகம், டேஃப் கல்லூரி என அனைத்தும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

ஆக கட்சியின் இனி அடுத்த கட்ட அரசியல் பயணம் உட்பட இதர நடவடிக்கைகள் குறித்து சிந்திக்க வேண்டும்.

குறிப்பாக இந்திய சமுதாயத்தை ஒரு குடையின் கீழ் இணைக்க வேண்டும்.

இதற்கான நடவடிக்கைகளை கட்சி தலைவர்கள் அனைவரும் முன்னெடுக்க வேண்டும்.

இதுவே எனது பிறந்தநாள் கோரிக்கை என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset