நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லோபாக் தமிழ்ப்பள்ளி ஆறாம் ஆண்டு மாணவர்களின் பட்டமளிப்பு விழா: வரலாற்றுச் சிறப்பு

சிரம்பான்:

லோபாக் தமிழ்ப்பள்ளி வரலாற்றில் முதன் முறையாக, ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா யூஎஸ்ஐஎம் பல்கலைக்கழகத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.

இந்த சிறப்புமிக்க விழாவில், மலேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி டான்ஸ்ரீ நளினி பத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

அவரது உரை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் ஊக்கமாக அமைந்தது.

இந்நிகழ்வின் மூலம், மொத்தம் 68 ஆறாம் ஆண்டு மாணவர்கள் தங்கள் தொடக்கக் கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்து, இடைநிலைப் பள்ளி கல்விக்குத் தயாராகியுள்ளனர்.

இந்த பட்டமளிப்பு விழா,
மாணவர்களின் கல்விப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும், பள்ளியின் பெருமைக்குரிய சாதனையாகவும் திகழ்ந்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset