நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மனிதவள அமைச்சிலும் புரட்சியை ஏற்படுத்தவிருக்கும் டத்தோஸ்ரீ ரமணன், அமைச்சரவையில் ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்திற்கும் குரல் கொடுப்பார்: ஹேமலா நம்பிக்கை

கோலாலம்பூர்:

அமைச்சரவையில் ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்திற்கும் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் குரல் கொடுப்பார்.

மைக்கி மகளிர் பிரிவுத் தலைவர் ஹேமலா இந்த நம்பிக்கையை தெரிவித்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அமைச்சரவை மாற்றங்களை அறிவித்தார்.

இதில் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் மனிதவள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மனிதவள அமைச்சராக பொறுப்பேற்கவிருக்கும் அவருக்கு மைக்கியின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

இதற்கு முன் டத்தோஸ்ரீ ரமணன் தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சராக பதவி வகித்தார்.

துணையமைச்சராக 2 ஆண்டுகள் பணியாற்றியதன் மூலம்
இந்திய தொழில்முனைவோருக்கான உருமாற்றங்களை வெற்றிகரமாக மேற்கொண்டார்.

கிட்டத்தட்ட 471.5 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒதுக்கீட்டில் பெரிய அளவிலான சீர்திருத்தங்களைச் செயல்படுத்தினார்.

இதன் மூலம் நாடு முழுவதும் 20,000க்கும் மேற்பட்ட இந்திய தொழில்முனைவோரை வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது.

குறிப்பாக அவரின் இப்பணி காலக்கட்டத்தில் இந்திய தொழில் முனைவர்களுக்கு பெரும் பயனாக இருந்தது. இதை யாராலும் மறுக்க முடியாது.

துணையமைச்சர் பொறுப்பில் கடுமையாக உழைத்த அவர் இன்று மனிதவள அமைச்சராக நியமிக்கப்படுள்ளார்.

இது அவரின் அயராத உழைப்பிற்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரமாகும்.

அடுத்து அவர் நாட்டின் மனிதவள மேம்பாட்டில் கவனம் செலுத்தவுள்ளார்.

அதிலும் அவர் பல புரட்சிகளை ஏற்படுத்துவார் என நம்பப்படுகிறது.

குறிப்பாக ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தின் குரலாக அவர் அமைச்சரவையில் ஒலிப்பார் என்ற நம்பிக்கைக்கு தமக்குள்ளதாக ஹேமலா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset