நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதிய அமைச்சரவையில் ஜலேஹா, நயிம் நீக்கப்பட்டனர்

கோலாலம்பூர்:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று செய்த பெரிய அமைச்சரவை மறுசீரமைப்பில் பிரதமர் துறையைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர்.

கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஜலேஹா முஸ்தபா, சமய விவகார அமைச்சர் முஹம்மது நயிம் மொக்தார் ஆகியோர் நீக்கப்பட்டனர்.

ஜலேஹாவுக்குப் பதிலாக இளைஞர், விளையாட்டு அமைச்சகத்தின் தலைவராக இருந்த ஹன்னா யோவும், நயிமுக்குப் பதிலாக  சூல்கிஃப்லி ஹசனும் நியமிக்கப்பட்டனர்.

நிர்வாகத் திறனை வலுப்படுத்தவும், அரசாங்கக் கொள்கைகளை மிகவும் திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்யவும் இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது என்ற அடிப்படையில், இன்று புத்ராஜெயாவில் உள்ள பெர்டானா புத்ரா கட்டிடத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்
 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset