நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இரண்டாவது அலை வெள்ளத்தை எதிர்கொள்ள முன்கூட்டியே எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் வலுப்படுத்தும்: ஜாஹித்

புத்ராஜெயா:

இரண்டாவது அலை வெள்ளத்தை எதிர்கொள்ள முன்கூட்டியே எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் வலுப்படுத்தும்.

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை தெரிவித்தார்.

இரண்டாவது அலை வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள தயார்நிலை, முன்கூட்டியே எச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்துவதன் மூலம் அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வானிலை நிலவரங்களை துல்லியமாக கணிப்பது கடினம்.

இருந்தாலும் இந்த நேரத்தில் முன்னுரிமை குடியிருப்பாளர்களை, குறிப்பாக அதிக ஆபத்துள்ள பகுதிகளில் உள்ளவர்களை முன்கூட்டியே வெளியேற்றுவதாகும் என்று தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவரான அவர் கூறினார்.

நம்மால் சரியாக கணிக்க முடியாது, ஆனால் இந்த அலை கிழக்கு கடற்கரையில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இது கிளந்தான், திரெங்கானு, பகாங், ஜொகூர், சரவாக் ஆகியவற்றை உள்ளடக்கிய இரண்டாவது அலையாகும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset