நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் 2 பேருந்துகள் மோதல்: 44 பேர் மருத்துவமனையில் அனுமதி

சிங்கப்பூர்:

ஜூரோங் வெஸ்ட் (Jurong West) வட்டாரத்தில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டன.

ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 1இல் விபத்து நடந்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. அது குறித்துக் காலை 10.52 மணிக்குத் தகவல் கிடைத்ததாகவும் அது தெரிவித்தது.

இரண்டு பேருந்துகளும் சேதமடைந்தன.

ஒரு பேருந்தின் ஓட்டுநர் இருக்கைப் பகுதியில் ஒருவர் சிக்கியிருந்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. நீரழுத்த இயந்திரத்தைக் கொண்டு அவரை மீட்டதாக அது தெரிவித்தது.

மற்ற பயணிகள் பேருந்துகளிலிருந்து இறங்கிச் சாலையோரம் அமர்ந்திருந்தனர். 

Tissue தாளைக் கொண்டு ரத்தம் கசிவதை நிறுத்த அவர்கள் முயன்றதாக 8world கூறியது.

மொத்தம் 44 பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

ஆதாரம்: 8world

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset