செய்திகள் உலகம்
மியான்மர் ராணுவ தாக்குதலில் மருத்துவமனை தரைமட்டம்: 34 பேர் உயிரிழந்தனர்
யாங்கூன்:
மியான்மரில் ராணுவத்துக்கும், கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், மருத்துவமனை மீது ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ரகைன் மாகாணத்தின் மிராக்-யூ நகரில் உள்ள அரசு பொது மருத்துவமனையை குறிவைத்து, ஆளும் மியான்மர் ராணுவத்தின் போர் விமானம் புதன்கிழமை இரவு வான்வழி தாக்குதல் நடத்தியதாக மியான்மர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அராக்கன் படை எனப்படும் கிளர்ச்சி குழுவின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதியில் இந்த மருத்துவமனை செயல்பட்டு வந்தது. ராணுவ விமானம் வீசிய இரண்டு குண்டுகளில் மருத்துவமனையை தாக்கின.
இந்தத் தாக்குதலில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட 34 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களில் 17 ஆண்களும், 17 பெண்களும் அடங்குவர். மேலும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மருத்துவமனையின் கட்டடங்கள், வாகனங்கள் கடும் சேதமடைந்தன.
கடந்த 2021-ம் ஆண்டு ராணுவ ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து, மியான்மர் முழுவதும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இந்தச் சூழலில், ஒரு மருத்துவமனையை குறிவைத்துத் தாக்கிய ராணுவத்தின் செயல் மனித உரிமை மீறல் என ஐ.நா., மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எனினும், இந்தத் தாக்குதல் குறித்து மியான்மர் ராணுவம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 12:54 pm
பாகிஸ்தான் உளவுப்பிரிவுத் தலைவருக்கு 14 ஆண்டுச் சிறை
December 12, 2025, 11:13 am
கிறிஸ்துமஸை முன்னிட்டு சாக்லெட்டின் விலை அதிகரிப்பு
December 12, 2025, 9:47 am
பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் நாடாளுமன்றத்தை கலைத்தார்
December 11, 2025, 10:29 am
நியூயார்க்கில் வீடில்லா மக்களுக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கி சோஹ்ரான் மம்தானி உதவி
December 10, 2025, 2:07 pm
16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக தடையை ஆஸ்திரேலியா முதல் நாடாக அமல்படுத்தியது
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
