நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாகிஸ்தான் உளவுப்பிரிவுத் தலைவருக்கு 14 ஆண்டுச் சிறை

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் ராணுவ நீதிமன்றம் முன்னாள் உளவுப்பிரிவுத் தலைவருக்கு 14 ஆண்டுச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

ஓய்வுபெற்ற ஃபையிஸ் ஹமீது (Faiz Hameed) பாகிஸ்தானிய ராணுவத்தில் இரண்டாவது உச்சத் தலைவராகப் பணியாற்றியவர்.

அவர் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு நெருக்கமானவர். 2022ஆம் ஆண்டில் நடந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்குப் பிறகு இம்ரான் கான் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். தற்போது ஊழல் புரிந்ததற்காகச் சிறையில் இருக்கிறார்.

முன்னைய உளவுப்பிரிவுத் தலைவர் ஹமீது மீது அரசியலில் ஈடுபட்டது, அதிகாரத்துவ ரகசியச் சட்டத்தை மீறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ராணுவம் வேறு எந்தத் தகவலையும் அளிக்கவில்லை. குறிப்பாக, அவர் புரிந்ததாகக் கூறப்படும் குற்றங்களைப் பற்றி எந்த விவரத்தையும் வெளியிடவில்லை.

ஹமீது 2024ஆம் ஆண்டில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். சொத்துச் சந்தை நிறுவனம் Top City நடத்திய கட்டுமான மோசடி தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டார்.

ஆதாரம் : AP

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset