நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கிறிஸ்துமஸை முன்னிட்டு சாக்லெட்டின் விலை அதிகரிப்பு

லண்டன்:

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு சாக்லெட்டின் விலை அதிகரித்துள்ளது.

ஈராண்டாக உயர்ந்து வந்த கொக்கோ விலை இந்த ஆண்டு தான் சரிந்தது.

தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையால் சாக்லெட்டுக்கான தேவை உயர்ந்துள்ளது. அதோடு சாக்லெட் விலையும் ஏறிவிட்டது.

2021ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கொக்கோவின் தேவை மேலோங்கி இருந்தது.

ஆனால் அதன் அறுவடை தேவையைப் பூர்த்திசெய்யப் போதுமானதாக இல்லை.

அதன் விளைவு சாக்லேட் விலையேற்றம் கண்டுள்ளது.

இருப்பினும் நிறுவனங்கள் ஏற்கனவே பண்டிகைக் காலத்திற்குத் தேவையான சாக்லெட்டுகளை அதிகச் செலவில் தயாரித்துவிட்டதால் சாக்லெட்டின் விலையைப் பெரிதாகக் குறைக்க முடியவில்லை.

சில நிறுவனங்கள் தங்கள் பொருள்களில் சாக்லெட்டின் அளவைக் குறைத்துக்கொண்டன.

Ferrero, Mars, Nestle போன்ற பெரிய நிறுவனங்கள் சாக்லெட் பொருள்களின் விலையை ஏற்றிவிட்டன.

அதனால் மக்களிடையே அவற்றுக்கான தேவையும் கொஞ்சம் குறைந்துவிட்டது.

ஆதாரம்: AFP

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset