நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் நாடாளுமன்றத்தை கலைத்தார்

பேங்காக்:

பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் அந்நாட்டின் நாடாளுமன்றத்தை கலைத்தார்.

தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் தனது பதவிக்கு வந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில் இன்று நாடாளுமன்றத்தை கலைத்தார்.

இது பொதுத் தேர்தலுக்கு வழி வகுத்துள்ளது.

தாய்லாந்து-கம்போடிய எல்லையில் புதுப்பிக்கப்பட்ட மோதலுடன் நாடு போராடி வருவதால், எதிர்பார்த்ததைவிட முன்னதாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய பொதுத் தேர்தலை நடத்துவதற்காக பிரதிநிதிகள் சபை கலைக்கப்பட்டுள்ளது  என்று தாய்லாந்து அரச ஆணை தெரிவித்துள்ளது.

பழமைவாத பூம்ஜைதாய் கட்சியைச் சேர்ந்த அனுடின், நெறிமுறை மீறல்களுக்காக நீதிமன்றத்தால் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், செப்டம்பரில் பிரதமரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset