செய்திகள் மலேசியா
PULSE இயக்கத்தின் 9ஆம் ஆண்டு பொதுக் கூட்டம்: புதிய செயற்குழு உறுப்பினர் தேர்வு வெற்றிகரமாக நடைபெற்றது
கோலாலம்பூர்:
அண்மையில் நடைபெற்ற Persatuan Usahawan Logistik Semenanjung Malaysia (PULSE) இயக்கத்தின் 9ஆம் ஆண்டு பொதுக் கூட்டம், 2026–2027 காலத்திற்கான செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் உறுப்பினர்கள் பெரும் அளவில் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர்.
100க்கும் மேற்பட்ட லோஜிஸ்டிக்ஸ் துறையைச் சேர்ந்த தொழில் நிறுவனர்கள் கலந்து கொண்டனர்.
சாலை போக்குவரத்து, விமானம், கடல்வழி ஏற்றுமதி இறக்குமதி , கிடங்கு மேலாண்மை, மற்றும் பிற துணை இலாஜிஸ்டிக்ஸ் சேவைகளை உள்ளடக்கிய தீபகற்ப மலேசியா முழுவதிலுள்ள நிறுவன உறுப்பினர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அதன் தலைவர் எம். ரவி ஜோஸ்வா தெரிவித்தார்
இந்த மாநாட்டின் வழி முக்கிய விவாதங்கள் உறுப்பினர்களுக்கான பலன்களை மேம்படுத்துவது, சங்க உறுப்பினர்களின் தொழில்முறை தரத்தை வலுப்படுத்துவது, மேலும் சங்கத்தையும் இலாஜிஸ்டிக்ஸ் துறையையும் உயர்த்தும் வகையில் ஒன்றுபட்ட செயல்பாடு, ஒத்துழைப்பை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தியது.
ஆண்டு கூட்டம் முடிவிற்கு பிறகு, 2026–2027 காலத்திற்கான செயற்குழு உறுப்பினர் தேர்தல் திறம்பட நடைபெற்றது.
உறுப்பினர்கள் பின்வரும் செயற்குழுவை தேர்ந்தெடுத்தனர்:
தலைவர்: ரவி @ ஜோசுவா
SJR Logistic Services (M) Sdn Bhd
துணை தலைவர்: குகநாதன்
KK Utama Logistics Sdn Bhd
செயலாளர்: முகமது ரஃபி
Aras Kilat Sdn Bhd
உதவி செயலாளர்: லிங்கேஸ் ராவ்
Lion Forwarding Sdn Bhd
பொருளாளர்: சுந்தர்
Global Carry Logistics Sdn Bhd @ GoCarry
செயற்குழு உறுப்பினர்கள்: சங்கர் – 3S Teguh Transport Sdn Bhd, ஜிஷ்னூர் – Mawar Movers Sdn Bhd.
PULSE லோஜிஸ்டிக்ஸ் தொழில் முனைவோரின் நலன்களை மேம்படுத்துவதில் தொடர்ந்து இணக்கமான அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.
புதிய தலைமையின் கீழ் மேலும் ஒத்துழைப்பு, புதுமை நிலையான வளர்ச்சியை நோக்கி சங்கம் முன்னேறும் என நம்புகிறது என்று தலைவர் ரவி தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
சபா மாநில சட்டமன்றத்தில் அலியாக்பர் ஹாஜிஜியை ஆதரிப்பார்: பாஸ்
December 11, 2025, 8:55 pm
ரோஸ்மா விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டை அரசு தரப்பு வாபஸ் பெற்றது
December 11, 2025, 8:54 pm
